Wrath of man(2021)
இந்த படத்தின் ஹீரோ "Jason Statham" மிகவும் பிரபலம் உங்களில் நிறைய பேருக்கு இவரை தெரியும். ஆம், 2019-இல் வெளிவந்த Fast and furious படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தில் முதல் பகுதியில் ஹீரோ ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அதாவது, அது எப்படிப்பட்ட நிறுவனம் என்றால், நிறைய பணங்களை டிரக் மூலம் சேரவேண்டிய இடங்களுக்கு பாதுக்காப்பாக கொண்டு செல்லவேண்டும். இவர் ஏன் இந்த வேலைக்கு வந்தார் மற்றும் ஏன் மௌனமாகமும் மற்றும் ஒருவித கோபத்தை அடக்கிக்கொண்டு வேலை செய்கிறார் என்பதோடு கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
இரண்டாம் பகுதியில், இவர் ஏன் இந்த வேலைக்கு சேர்ந்தார், அதன் பின்னணி என்ன என்பதையும் சற்று ஏற்ற இறக்கத்துடன் செல்கிறது.
கதையை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இவர் ஒரு "Gang leader" இவர்களை அந்த ட்ரக்-இல் வரும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் திட்டுகிறார்கள், இதன் இடையில் யாரோ ஒரு கொள்ளை கும்பல் அந்த ட்ரக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதோடு, எதிர் பாராதா விதமாக ஹீரோவின் மகன் தான் தந்தை முன்பே கொல்லப்படுகிறார். ஆனால் யார் கொலைசெய்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர்களை கண்டுப்பிடித்து, பழிக்கு பழி வாங்குவதுதான் மொத்த கதை.
ஹீரோ அவர்களை கண்டுபிடித்தாரா..
அவர்களை கொன்றாரா ..
மொத்தத்தில் Wrath of man(2021) படம் எப்படி இருக்கு!
வழக்கமான ஒரு பழிவாங்கும் கதை என்றாலும், மோசமாக இல்லை ஒரு முறை பார்க்கலாம்.
படத்தில் எந்த ஒரு ஆபாச காட்சிகளும் இல்லை அதனால் குடும்பத்தோடு பார்க்கலாம். சண்டை காட்சிகள், துப்பாக்கி சத்தம் பிடிக்காதவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.