Bitcoin என்றால் என்ன? Cryptocurrency என்றால் என்ன?

பிட்காயின் என்றால் என்ன? கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

பலருக்கும் இந்த கேள்வி இன்றும் சரியாக விடை தெரியாமல் இருக்கிறது!

முதலில் Cryptocurrency என்ன என்பதை பார்ப்போம்!



கணினி உதவியுடன் மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் டிஜிட்டல் பணம்தான், ஆனால் இதை ரூபாய் நோட்டுக்கள் அல்லது நாம் பயன்படுத்தும் 1 ருபாய் 2 ருபாய் காயின்கள் போல பயன்படுத்த முடியாது! எல்லாமே ஆன்லைன்தான், இந்த கிரிப்டோகரன்சி-இல் பல வகையான  காய்ன்கள் உள்ளது அதில் மிகவும் பிரபலமானதுதான் இந்த Bitcon ஆகும். சுமார் 4000-க்கு மேற்பட்ட காய்ன்கள் உள்ளன.

Bitcoin 

Bitcoin ஒரு "Digital Currency" ரகசிய குறியீடாக நம்பர்களும், எழுத்துக்களும் சேர்ந்தவையா இருக்கும்.  இந்த Bitcon மொத்தமாகவே 21 கோடி bitcoin -ஐ உருவாக்கி பயன்பாட்டுக்கு தரமுடியும். 21 கோடியில் இருந்து இதன் எண்ணிக்கை குறைய குறைய அதன் மதிப்பு உயரும்.


இந்த Bitcoin ஏற்ற இறக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும், அதாவது ஷேர் மார்க்கெட்டில் தங்கம் அல்லது வெள்ளி போன்றவைகள் போல இவையும் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். ஒரே நாளில் லச்சாதிபதியாகவும் மாற்றும் அல்லது கீழே இறங்கி 1 ரூபாய்க்கும் சென்று பிச்சாதிபதியாகவும் மாற்றும்.


இந்த Bitcoin இன்றைய மதிப்பு

இந்த Bitcoin போல நிறைய இருக்கின்றன. கீழே சில 

Ethereum

Tether

Binance Coin

Cardano

Dogecoin

XRP

USD Coin

Polkadot

Binance USD

Uniswap

Bitcoin Cash

இந்த Bitcoin ஆரம்பத்தில் ஜப்பானில் புழக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது இப்போது பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளது குறிப்பாக அமெரிக்கா.



Bitcoin எப்படி செயல்படுகிறது ! பணம் பாதுகாப்பா இருக்குமா !?


இதை பண பரிவார்த்தை Block Chain மூலம் நடைபெறுகிறது. அதாவது உங்களுக்கு ஒரு Bitcoin அக்கௌன்ட் இருக்கிறது என்றால் உங்கள் தகவல்கள், உங்களை போல அக்கௌன்ட் வைத்திருக்கும் அனைவரிடமும்  உங்கள் தகவல்களும் இருக்கும் ஆனால் உங்கள் தகவல்களை யாராலும் திருட முடியாது! ஏன் என்றால் உங்களுக்கென ஒரு private key கொடுக்கப்படும் அதன் மூலம் உங்கள் அக்கௌன்ட் விவரங்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.


இதுவே ஒரு பேங்க் என்றால் Main Server-ஐ Hack செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம், ஆனால் இந்த Block Chain -ஐ அப்படி செய்ய முடியாது.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பணம் இருக்கும் ஆனால் இந்த Bitcon உலகில் உள்ள அனைத்திற்கும் பொதுவானதாக உள்ளது அதாவது பல மொழிகள் இருந்தாலும் English - ஐ பொது மொழியாக அனைவராலும் ஏற்று கொள்கிறோம் அல்லவா! அது போலத்தான்.

ஆனால் இந்த Bitcon சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. நம் இந்தியாவில் கூட இது சில விதிமுறைகளின்படிதான் செயல்படுகிறது. இந்தியாவில் இந்த டிஜிட்டல் காய்ன்ட்ஸ் செல்லாது என்று அறிவித்தால் Bitcoin மதிப்பு இந்தியாவில் இறங்கிவிடும் யார் வாங்க ரெடியாக உள்ளாரோ அவரிடம்தான் விற்கவேண்டிவரும்.

இந்த Bitcoin என்பது உண்மைதான் மற்றும் பாதுக்காப்பானதும்கூடத்தான் ஆனால் எப்போது என்ன ஆகும் என்று தெரியாது, ஏன் என்றால் நம்மிடம் தங்கம் அல்லது வெள்ளி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அதை அரசாங்கம் செல்லாது என்று அறிவித்துவிட்டால் கூட நம்மிடம் அந்த தங்கம் இருக்கும் யாரிடமாவது விற்றுவிடலாம் ஆனால் இந்த கண்ணுக்கு தெரியாத Bitcoin -ஐ என்ன செய்வது!

சிலவரிகளில் சொல்லவேண்டும் என்றால், Sharemarket - இல் ஒன்றை கம்மி விலைக்கு வாங்கி விலை ஏறிய உடன் விற்கிறோம் அல்லவா! அது போலத்தான் இந்த Bitcoins.

அதிக பணம் வைத்திருப்பவர்கள் பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் நிச்சயம் இதில் ஈடுப்படலாம். எப்படியாவது வாழ்க்கையை மேல கொண்டுவரவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகமாக Invest பண்ணமால், சிறிதாக ஆரம்பித்து பெரிய அளவில் வளர வாழ்த்துகிறேன்.

 


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts