Raya and The Last Dragon
இது ஒரு அனிமேஷன் படம் மற்றும் இந்த படத்தின் மொத்த நிமிடங்கள் 1h 57m.
Disney Animation Studios வெளியிட்டு இருக்கிறார்கள். டிராகன்-ஐ மைய்யமாக வைத்து இந்த கதை நகர்கிறது. இதில் ஒவ்வொரு டிராகன்-க்கு ஒவ்வொரு சக்திகளை உள்ளன. இதன் மூலம் டிராகன்-களும் மக்களும் ஒற்றுமையுடன் செழிப்பாக வாழ்கின்றன .. ஆனால் திடீர் ஏற்படும் மாயப்புயலால் மக்கள் ஒவ்வொருவரை கல்லாய் மாறுகின்றனர். அதாவது அந்த சூறாவளி காற்று படும் அனைவரும் கல்லாய் மாறுகின்றன.
இந்த ட்ராகன்-களை தவிர, இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 டிராகன்-களின் சக்தியை ஒன்று திரட்டி ஒரே சக்தியாக மாற்றுகிறார்கள் அந்த சூறாவளியை அழிக்க. அந்த சூறாவளியும் அழிந்தது. பிறகு காலம் கடந்து , பல வருடங்களாக அந்த சக்தியை பாதுக்காத்துவந்த குடும்பத்திடமிருந்து, 5 நாட்டை சேர்ந்த மன்னர்கள் பறிக்கிறார்கள். அந்த ஒரு சக்தி 5 துண்டுகளாக பிரிந்து இருக்கவே, மீண்டும் மாயாசூறாவளி வந்து மக்களை கல்லாக்குகிறது. இந்த சூறாவளி தண்ணீரில் மட்டும் வராது.
இந்த படத்தில் வரும் ஹீரோயின் அந்த பிரிந்து கிடைக்கும் சக்திகளை ஒன்று திரட்டி, கல்லாய் போன மக்களையும், தன் அப்பாவையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
அனிமேஷன் காட்சிகள் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.
இதில் ஹீரோயின் வளர்க்கும் குட்டி பிராணி மிகவும் வித்தியாசமாகவும் மற்றும் ஹீரோயின் கூடவே படம் முழுக்க வருகிறது.
இதில் வரும் குட்டி குழந்தை, பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்கிறது.
இதில் வரும் ட்ராகன். மிகவும் கொடூர குணமாக காட்டாமல் சிரிப்பாய் காட்சிகளை நகர்த்தி சென்றுள்ளனர்.
மொத்தத்தில் இந்த "Raya and The Last Dragon" படம் எப்படி இருக்கு.
சலிப்பில்லாமல் கதை நகர்கிறது. குழந்தைகளுக்கு ஏற்ற படம் அவர்கள் மிகவும் ரசித்து பார்ப்பார்கள்.