முகப்பரு பிரச்சனையா! இதோ தீர்வு

முகப்பரு மறைய| முகப்பருக்களுக்கான டிப்ஸ் 

முகப்பரு என்பது ஒன்று வந்தால் அது முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் அதுவே நிறைய முகப்பருக்கள் வந்தால் அழகனா முகத்தை கொஞ்சம் அலங்கோலமாக்கிவிடும். நான் படித்ததை மற்றும் தெரிந்ததை உங்களிடம் பகிர்கிறேன். உங்களுக்கு தேவையான குறிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். 



*முகப்பரு மறைய சந்தனம், மிளகு, ஜாதிக்காய் இவைகளை சேர்த்து அரைத்து முகப்பரு உள்ள இடத்தின் மீது தொடந்து ஒரு வாரம் பூசி வந்தால் முகப்பரு வேரொடு மறையும்.



*வாழைத்தண்டை பாதியாக பிளந்து அதை, முகப்பரு உள்ள இடத்தின் தினமும் இரண்டு நிமிடங்கள் தேய்த்து பின் கழுவி வந்தால் பருக்கள் நீங்கள் உங்கள் முகம் அழகாகும்.

*சிறிது துளசி இலைகளை எடுத்து, அதனுடன் கற்புரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் தொடந்து ஒரு வாரம் பூசிவர முகப்பரு காணாமல் சென்றுவிடும்.



*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதை நன்றாக கொதிக்க விடவும், அதில் வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு  போட்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும். அந்த தண்ணீர் நன்கு கொதித்த பின் அதை இரவு முழுவதும் விட்டு, மறுநாள் காலை அந்த வேப்பிலை தானில் நன்றாக முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மறைய தொடங்கும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts