சர்ப்பட்டா பரம்பரை (SARPATTA) படம்
இந்த படம் பார்க்கவேண்டும் என்ற தாக்கம் அவ்வளவுவாக இல்லாமல் போனது ஏன் என்றால் அது குத்து சண்டை மற்றும் அந்த காலத்து படம் போல இருக்கும் என எண்ணியதால். நம் எண்ணம் சில நேரங்களில் தவறாக போகிவிடுகிறது. இந்த படம் Amazon-இல் OTT - வெளியிட்டு இருக்கிறார்கள்.
உண்மைதான், இது வழக்கம்போல அதே குத்துச்சண்டையை மைய்யமாக வைத்து எடுத்தப்படம்தான். இந்த படத்தின் இயக்குனர் ப. ரஞ்சித் ஆம், அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா படத்தை இயக்கியவர் அதுமட்டுமில்லாமல் பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு போன்ற படத்தின் தயாரிப்பாளர். இவர் எடுக்கும் படங்கள் சில ஓடினாலும் சில படங்களை ஓடா விட்டாலும், பிரபலமான ஒரு இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த சர்ப்பட்டா படத்தில் குத்து சண்டை என்பதையும் மீறி சர்ப்பட்டா பரம்பரை, சர்ப்பட்டா பரம்பரை என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதை பார்க்கும்போது இது குத்துசண்டை படம்போல இல்லை சாதிப்படம் போல இருக்கிறது. சர்ப்பட்டா பரம்பரை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லும்போது எரிச்சல்தான் வருகிறது.
இதில் குத்து சண்டை வாத்தியாராக நடிகர் பசுபதி நடித்திருக்கிறார். அவரும் அந்த பரம்பரையை சேர்ந்தவர்தான். நடிகர் ஆர்யாவுக்கு சிறு வயதுமுதல் குத்துசண்டை என்றால் உயிர் ஆனால் அவரின் அம்மாவுக்கு பிடிக்காது என்பதால் குத்துச்சண்டைகளை அம்மாவுக்கு தெரியாமல் பார்க்க மட்டும்தான் செல்வார். ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக ஆர்யா குத்துச்சண்டையில் பங்கேற்க கடைசியில், இந்த சர்ப்ப்படா பரம்பரை ஜெயித்ததா அல்லது மற்ற பரம்பரை ஜெயித்ததா என்பதுதான் முழு கதை.
இந்த கதையில் ஆர்யாவின் அம்மா ஏன் குத்து சண்டையை வெறுக்கிறார் மற்றும் ஆர்யாவின் திருமணத்திற்கு பிறகு என்ன நடந்தது. ஆர்யா குத்து சண்டையில் வெற்றி பெற என்னென்ன தடைகளை சந்திக்கிறார். போன்றவை கதையின் கருக்கள்.
இதில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைவரின் பெயரும் சற்று வித்தியாசமாக இருந்தது முக்கியமாக டான்சிங் ரோஸ் என்ற பெயர்.
படத்தில் முதல் பகுதி சற்று நேரத்திற்கு பிறகு கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கிறது.
இரண்டாம் பகுதி சில திருப்பு முனைகளுடன் கதை நகர்கிறது.
பாடங்கள் பரவாயில்லை. சும்மா சொல்ல கூடாது நடிகர் ஆரிய உடம்பை நன்கு ஏற்றி வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் சர்ப்பட்டா பரம்பரை எப்படி இருக்கிறது..
குத்து சண்டை என்றாலும் மற்றும் படம் கொஞ்சம் பெரியது என்றாலும், அதை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றுக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
படம் நல்லா இருக்கு பார்க்கலாம்.