Loki web series 1 to 6
அவென்ஜர்ஸ்(Avengers) படம் பார்த்தவர்கள் அனைவருக்கு யார் இந்த லோகி என்று நன்கு தெரியும். ஆம், அவென்ஜர்ஸ் படத்தில் ஒருவித சக்தியை திருடிவிட்டு மாயமாக மறைந்துவிடுவார். பிறகு என்ன ஆனது என்று தெரியாது. அதன் மீதுதான் இந்த லோகி படம். (Web Series).
இதன் முதல் பகுதியில் அவர் எதோ ஒரு உலகத்திற்கு செல்கிறார் அங்கு அவரை ஒரு குரூப் கைது செய்கிறார்கள். கைதி செய்வதோடு அவர் கழுத்தில் பிணைப்பு ஒன்றை பெல்ட் போல லாக் செய்கிறார்கள். அதனால் லோகியின் சக்திகள் எதுவும் வேலை செய்யவில்லை. அவருக்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் செல்கிறார் அது மட்டுமல்ல நமக்கு கதை புரியாமல் செல்கிறது.
முதல் பகுதியில் லோகியை சிறையில் அடைக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியாக இதில் இதுவரை 6 பகுதிகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
முதல் பகுதியில் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள் நமக்கே தலைவலி வந்துவிடும்போல. இரண்டாம் பகுதி சற்று கதை புரிகிறது அதாவது சேனல் என்ற பெயரில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. அதாவது காலமாற்றங்களை கண்காணிப்பதுதான் இந்த நிறுவனத்தின் வேலை, அதுமட்டுமில்லாமல் காலவரிசையை யாராவது மாற்ற நினைத்தால் அவர்களை கைது செய்து தண்டனை கொடுக்கிறார்கள். எதிர் காலத்திற்கு சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்து வருங்காலத்தை சரி செய்கிறார்கள்.
இந்த சேனலில் பணிபுரியும் அனைவரின் நினைவுகளையும் அழித்து விடுகிறார்கள் மற்றும் அவர்கள் இங்குதான் வேலை செய்வதாக நினைக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் அவர்களின் பூர்வீகம் இதுதான் என்று நம்புகிறார்கள். கதையை சுற்றிசுற்றி பார்த்தால் இதில் லோகின் பல பிறவிகள் அதாவது பல அவதாரங்கள் இதில் இடம்பெறுகின்றன போன ஜென்மத்தில் பெண்ணாக அதற்கு முன் ஜென்மத்தில் முதலையாக அதற்கு முன் ஜென்மத்தில் சிறுவனாக.. என பல தோற்றங்களை காட்டுகிறார்கள்.
அந்த தோற்றங்களில் பெண்ணாக வரும் லோகி இந்த சேனலை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார் மற்றும் இந்த சேனலை யார் உருவாக்கியது என்பதை தெரிந்துகொள்ள சாவின் எல்லைவரை செல்கிறார்.
ஒரு கட்டத்தில் லோகியும், அந்தப் பெண்ணும், இந்த சேனலை உருவாக்கியவனை கண்டுபிடிக்கிறார்கள், பிறகு அவன் ஒரு கதை சொல்கிறான் 20 நிமிடங்களாக அதை நம்புவதா! இல்லையா என்பது கூட இந்த இருவருக்கும் தெரியவில்லை. பிறகு இவர்கள் சேனலை அழித்தார்களா! அவனையும் அழித்தார்களா! என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.