இந்த வெப்சீரிஸ் SonyLIV வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தின் மொத்த நிமிடங்கள் 3h 25m ஆகும்.
இந்த படத்தின் ட்விஸ்ட் பற்றி சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்துவிடும், எனவே வழக்கம்போல கதையை சுற்றியே சொல்கிறேன்.
முதலில் போலீஸ் துறை மற்றும் போலீஸ் என்கவுண்டர் செய்வதும், அதனால் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. பிறகு குளோபல் நியூஸ் சேனலில், நியூஸ் வாசிக்கும் பெண்மணிக்கு மிரட்டல் விடுவதுபோல தொலைப்பேசி அழைப்புகள் வருகிறது. இப்படியே கதை ஒன்றும் புரியாமல் சற்று ஏற்ற இறக்கத்துடன் செல்கிறது.
பிறகு, அந்த உயரதிகாரி DCP யை, நியூஸ் சேனலில் பணிபுரியும் படத்தின் கதாநாயகி சந்தித்து தனக்கு நடக்கும் சர்ச்சைக்குரிய தொலைபேசி பற்றி சொல்ல மற்றும் DCP க்கு, அதையும் தாண்டி சில தீவீரவாதிகளின் தகவல்கள் கிடைக்க .. இந்த இரண்டு குற்றங்களுக்கும் எதோ ஒரு தொடர்ப்பு இருப்பதுபோல கதை சற்று சூடு பிடிக்கிறது. இதன் நடுவே அந்த DCP குடும்ப வாழ்க்கை பற்றியும் சில பிளாஷ்பேக்குகளோடு கதை நகர்கிறது.
பிறகு நேபாளத்தை காண்பிக்கிறார்கள், அதில் நடக்கும் அரசியல் மற்றும் சட்டவிரோத செயல்கள் பற்றி விவரிக்கப்படுகிறது.
படத்தில் நிறைய புகைப்பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது குடிக்கும் காட்சிகள் நிறைய இடம்பெறுகின்றன.
பாதிப்படத்தை பார்த்த பிறகு கதை எதை நோக்கி செல்கிறது என்று துல்லியமாக தெரியவில்லை. யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று புரியவில்லை.
கதையில் DCP தீவிரவாதிகளை பிடித்தாரா
கதையின் ஹீரோயினுக்கு தொலைபேசியில் யார் பேசினார்கள்.
கதையின் கடைசி எபிசோடில் எதிர்பாராத திருப்புமுறை ஏற்படுகிறது.
அந்த திருப்புமுனையில் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கிறது.
இதை தீவிரவாத கதை என்று சொல்ல முடியாது, இது ஒரு காதல் கதையும் கூட..
மொத்தத்தில் இந்த காத்மன்ட் படம் எப்படி இருக்கு!
ரொம்ப நல்ல இருக்கு என்று சொல்ல முடியாது போர் அடிக்காமல் செல்கிறது. பார்க்கலாம்.
.