எந்த கீரையில் என்ன சத்து - கீரையின் பயன்கள்
வாரம் ஒரு முறை ஒரு ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. சிலருக்கு கீரை சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் ஆனால் எந்த கீரையில் என்ன சத்து இருக்கிறது என்பது சரியாக தெரியாது! அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.
பொன்னாங்கன்னி கீரை: இரத்தம் விருத்தியாகும்
அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்
வல்லாரை கீரை: நியாபக சக்தி, அதாவது நினைவாற்றல் அதிகரிக்கும்
கொத்தமல்லி கீரை: இது பசியை தூண்டும்(சிறுநீரக கல்லை கரைக்க உதவும்)
வெந்தயக்கீரை: இருமலை வராமல் தடுக்கும்.
அரைக்கீரை: இது நரம்பு தளர்ச்சியை போக்கவல்லது.
புதினாக்கீரை: புத்துணர்ச்சிகாக வைக்கவும் மற்றும் வாந்தி மயக்கம் போன்றவற்றை குணமாக்கும்.
முருங்கைக்கீரை: ஆண்மை பிரச்னையை குணமாக்கும் மற்றும் தாய்ப்பால் பெருகும்.
தூதுவளை: இது சளி பிரச்சனைக்கு மற்றும் மூச்சு சீராக உதவும்.
சிறு கீரை: மலசிக்கல் மற்றும் சிறுநீரக அனைத்து பிரச்சனையையும் தீர்க்கும்.