Facebook-ல எப்படி sell பன்றது (How to sell your product on Facebook)

How to sell your product on Facebook Market 

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த பதிவு பிசினஸ் பன்றவங்களுக்கு ரொம்ப உதவிய இருக்கும்.


ஆமாங்க நீங்க ஒரு ஷாப் வெச்சிருப்பிங்க அல்லது உங்க வீட்டிலையே எதாவது sell பண்ணுவீங்க.. உதாரணத்திற்கு, ஆடைகள் , தேன், Dry fruits அல்லது எதோ ஒரு தொழில் சார்ந்த பொருள் இவற்றை நீங்கள் facebook- மூலமாக உங்கள் லாபத்தை ரெட்டிப்பு ஆக்கலாம். நிறைய பேருக்கு ஐடியா இருக்கும் ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கலாம் அவர்களுக்காக இந்த பதிவு.

எப்படி FACEBOOK-ல் விற்பது என்பதை கீழ பார்க்கவும்.

எந்த பொருள் விற்பதாக இருந்தாலும் உங்களுக்கு முதலில் அந்த தொழில் சம்பந்தப்பட்ட குரூப் FACEBOOK -ல் இருக்க வேண்டும், அதற்க்கு நீங்கள் கீழே உள்ளது போல உங்கள் FACEBOOK பக்கத்தில் மேலே கொடுத்துள்ளது SEARCH-ஐ கிளிக் பண்ணுங்க 


 பிறகு நீங்க எந்த பொருளை விற்க வேண்டுமோ அதை இங்கே TYPE செய்யவும். நான் உதாரணத்திற்கு "DRESS GROUP" என்று கொடுத்துள்ளேன். பிறகு உங்களுக்கு எந்த குரூப் தேவையோ எந்த குரூப்-இல் JOIN பண்ணிக்கோங்க. 


உங்களுக்கு தேவையான குரூப்களில் JOIN செய்த உடன், மேல கொடுக்கப்பட்டுள்ளதை போல கிளிக் செய்து பிறகு கீழே உள்ள MARKETPLACE என்பதை கிளிக் பன்னிக்கோங்க 



பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போல "SELL" என்பதை கிளிக் பண்ணுங்க 




பிறகு "CREATE NEW LISTING" என்று வரும் அதில் "ITEM" என்பதை கிளிக் பன்னிக்கோங்க.




கீழே உள்ள படத்தை பாருங்கள் அதில் உள்ளதுபோல "ADD PHOTOS" என்பதை கிளிக் செய்து நீங்க விற்க வேண்டிய பொருட்களில் புகைப்படங்களை UPLODAD பண்ணுங்க, பிறகு TITLLE என்று கொடுத்துள்ள இடத்தில் உங்கள் பொருட்களுக்கு ஏற்ற தலைப்பு வையுங்கள் மற்றும் "PRICE" உள்ள இடத்தில் உங்கள் விலையை அப்டேட் பண்ணுங்க, பிறகு "CATEGORY மற்றும் CONDITION (புதுசா இல்லது பழசா) - Description - நீங்கள் விற்கும் பொருள்களை பற்றி விரிவாக அப்டேட் பண்ணுங்க.



கடைசி கட்டத்துக்கு வந்துட்டோம், அனைத்தையும் பூர்த்தி செய்த உடன் மேலே உள்ள "Publish" என்பதை கிளிக் பண்ணுங்க பிறகு கீழே கேட்கும் Marketplace மட்டுமா அல்லது பிற குரூப்பிலும் ஷேர் செய்யணுமா என்று நீங்க முதலில் JOIN செய்து வைத்திருந்த குரூப்கள் இங்க காண்பிக்கப்படும் அவற்றில் கிளிக் செய்துக்கொள்ளுங்கள் அதிக பட்சம் 10 குரூப்களை கிளிக் செய்துக்கொள்ளலாம் .. பிறகு "DONE" என்பதை கொடுங்கள் அவ்வளவுதான் வேலை முடிந்தது.

ஒரே நேரத்தில் உங்கள் பொருளை பல லட்சம் பேர் பார்ப்பார்கள், உங்கள் பொருளை வாங்க வேண்டும் என்றால் உங்களை தொடர்பு கொள்ளுவார்கள் FACEBOOK MESSENGER மூலம்.. தொடர்பு கொண்ட உடன் உங்கள் தொலைப்பேசி என்னை கொடுத்து நீங்கள் விரிவாக பேசிக்கொள்ளலாம் உங்கள் தொழில் ரீதியாக.


அன்பு நண்பர்களே என்னால் முடிந்தவரை புரியவைக்க முயற்சி செய்துள்ளேன். இந்த பதிவு பலருக்கு இல்லை என்றாலும் சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts