அன்பு நண்பர்களுக்கு வணக்கம், இன்று நடிகர் விஜய் அவர்கள் பிறந்தநாள் அதனால்தான் இந்த பதிவு!
நடிகர் விஜயின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர், அவர் 22-ஜூன்-1974- இல் பிறந்தார். இவர் சென்னை லயோலா கல்லூரியில் படித்தார்.
இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல நடன கலைஞர் மற்றும் பின்னணி பாடகரும் ஆவர்.
விஜய் குடும்பம்
அப்பா - எஸ் . ஏ . சந்திரசேகர்
அம்மா - சோபனா
தங்கை - வித்யா (சிறு வயதில் இறந்து விட்டார்)
மனைவி - சங்கீதா சொர்ணலிங்கம் (இலங்கை)
சக நடிகர்களே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு டான்ஸ்-ல் பின்னி பெடலெடுப்பார். அவர் உடம்பு சரியான அளவில் பராமரிப்பதற்கு இந்த டான்ஸ்- ம் நிச்சயம் ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நடிகர் விஜயை, அவர் ரசிகர்களும் மற்றும் ஊடங்கங்களும் செல்லமாக தளபதி என்று குறிப்பிடுகின்றனர்.
தளபதி விஜய் நடித்த முதல் திரைப்படம் "வெற்றி" (Vetri) 1984 - இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
அதே வருடத்தில் "குடும்பம்" (Kudumbam) என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு படத்தையும் இயக்கியது அவரது தந்தை S . A . சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் "வசந்த ராகம்"(vasantha raagam) - 1986
"சட்டம் ஒரு விளையாட்டு" (Sattam oru vilaiyattu) - 1987
"இது எங்கள் நீதி" (Ithu engalneethi) - 1988
போன்ற படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரமாக, சிறுவயதில் நடித்திருக்கிறார்.
நடிகர் விஜய் அவர்கள் ஹீரோவாக அறிமுகமாக திரைப்படம்தான் "நாளைய தீர்ப்பு" (Naalaiya theerppu) - 1992.
பிறகு கீழே உள்ள படங்களில் நடித்தார்.
செந்தூர பாண்டி - 1993
ரசிகன் - 1994
தேவா - 1995
ராஜாவின் பார்வையிலே - 1995 (தல, தளபதி சேர்ந்து நடித்த படம்)
விஷ்ணு - 1995
சந்திரலேகா - 1995
கோயம்புத்தூர் மாப்பிள்ளை - 1996
பூவே உனக்காகே - 1996
வசந்த வாசல் - 1996
மாண்புமிகு மாணவன் - 1996
செல்வா - 1996
காலமெல்லாம் காத்திருப்பேன் - 1997
லவ் டுடே - 1997
ஒன்ஸ் மோர் - 1997
நேருக்கு நேர் - 1997
காதலுக்கு மரியாதை - 1997
நினைத்தேன் வந்தாய் - 1998
ப்ரியமுடன் - 1998
நிலவே வா - 1998
துள்ளாத மனமும் துள்ளம் - 1999
என்றென்றும் காதல் - 1999
நெஞ்சினிலே - 1999
மின்சார கண்ணா - 1999
கண்ணுக்குள் நிலவு - 2000
குஷி -2000
ப்ரியமானவளே - 2000
பிரெண்ட்ஸ் - 2001
பத்ரி - 2001
ஷாஜகான் - 2001
தமிழன் - 2002
யூத் - 2002
பகவதி - 2002
வசீகர -2003
புதியகீதை -2003
திருமலை - 2003
உதயா - 2004
கில்லி - 2004
மதுர - 2004
திருப்பாச்சி - 2004
சுக்ரன் - 2005
சச்சின் - 2005
சிவகாசி - 2005
ஆதி - 2006
போக்கிரி - 2007
அழகிய தமிழ்மகன் - 2007
குருவி - 2008
பந்தயம் - 2008
வில்லு - 2009
வேட்டைக்காரன் - 2009
சுறா - 2010
காவலன் - 2011
வேலாயுதம் - 2011
நண்பன் - 2012
ரவுடி ராவுத்தர் - 2012 (ஹிந்தி பிலிம் - Guest Role)
துப்பாக்கி - 2012
தலைவா - 2013
ஜில்லா - 2014
கத்தி - 2014
புலி - 2015
தெறி - 2016
பைரவா - 2017
மெர்சல் - 2017
சர்க்கார் - 2018
பிகில் - 2019
மாஸ்டர் - 2021
இவர் நடித்த சில படங்கள் தோல்வியைக்கண்டாலும் அதை பெரிதாய் பொறுத்தப்படுத்தாமல் இன்னும் சிறப்பாக நடித்துக்கொண்டிருப்பதால்தான் இன்னும் சினிமாவில் இருந்து கீழே விழாமல், உயந்த உச்சத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறார்.
என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் அந்த திமிர் இல்லாமல் எளிமையாக நடந்துக்கொள்பவர் நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போல.
இவர் ஸ்டார் இந்தியாவின் எட்டு விருதுகள், தமிழக அரசின் மூன்று விருதுகள் மற்றும் சிமா விருதுகள் வாங்கி உள்ளார்.
இவருக்கு இப்போது வயது 47 ஆனால் இன்னும் சின்ன பையன் போல உடம்பை பராமரித்து வருகிறார்.
நடிகர் விஜய் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ தான் ஓசூரில் தன் தங்கையின் வித்யா நினைவாக இலவச பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி உள்ளார் மற்றும் விஜய் ரசிகர் மூலம் அந்த பள்ளிக்கு தேவையானதை பல வருடங்களாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன் ஏதேனும் பிழையோ அல்லது தவறோ இருந்தால் மன்னிக்கவும்.
இளைய தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.