தேன் வகைகள் எத்தனை !? தேன் குணங்களும் பயன்களும்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !

உலகில் கெட்டுப்போகாத ஒன்றுதான் இந்த தேன்.


நாம் வாங்கும் brand தேன்-களுக்கு Expiry date போட்டு தராங்க .. அது என்ன கதைன்னு தெரியல, முடிஞ்சவரை நாட்டு தேனை பயன்படுத்துங்கள்.

இந்த தேன் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, தேன் நாட்டு மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. 


தேன் கூட்டில் இருந்து புதிதாக எடுக்கப்படும் தேன், தெளிவாகவும்,இனிப்பும் மற்றும் லேசான துவர்ப்பும் கொண்ட சுவையுடன் இருக்கும். பொதுவாக தேனுக்கு குடல் புண்களை ஆற்றும் தன்மையையும் மலத்தை இளக்கும் தன்மையையும் மற்றும் தொண்டையில் கட்டும் கோழையை வெளியேற்றும் தன்மையையும், பசியை தூண்டும் மற்றும் தூக்கத்தை உண்டாக்கும் தன்மையையும் கொண்டது.


தேன் வகைகள் :

மலை தேன் - மலை தேனால் சுபம், மூச்சிரைப்பு, விக்கல், இருமல், உடல்வெப்பம் போகும் மற்றும் பசி  அதிகரிக்கும்.

கொம்பு தேன் - வாத, பித்த, கபம் போன்ற பிரச்சனைகளை நீக்கி பசியை உண்டாக்கும்.

மரப்பொந்து தேன் - மரப்பொந்து தேன் சாப்பிட்டால் பசி அதிகரிக்கும், வாந்தி, மந்தம், விக்கல், நாவில் சுவையின்மை, உடல் எடை கூடுதல் ஆகியவை நீங்கி உடல் சுகம் பெரும் மற்றும் உடல் பலம் பெரும்.

புற்றுத் தேன் - புற்றில் இருந்து எடுக்கப்படும் தேன், சுபம், இருமல், மூச்சிரைப்பு, வாந்தி மற்றும் கண் நோய்கள் நீங்கும்.

மனைத் தேன் - வீடுகளில் காட்டப்படும் கூட்டில் இருந்து கிடைக்கும் தேன் , புண்,புரையோடிய புண் கரப்பான் எனும் தோல் நோய் இவற்றை நீக்கி பசியை அதிகரிக்க செய்யும். மேலும் புழுவெட்டு, இருமல், கபம் இவற்றை நீக்கி உடலுக்கு நன்மை தரும்.

புதிய தேன் - ஆயுளை அதிகரிக்க செய்யும் மற்றும் உடலை வெப்பத்தை தணிக்கும். நாவில் சுவையின்மையை போக்கும். உடலுக்குள் இருக்கும் கபத்தை நீக்கி உடலுக்கு அழகை கொடுக்கும்.

பழைய தேன் - சிறிது இனிப்பும், அதிக புளிப்பும் உடைய பழைய தேன், வாதத்தை அதிகப்படுத்தி வயிறு எரிச்சலை தரும் மருந்தின் குணத்தை கெடுக்கும்.

மேல உள்ள தேன் பற்றிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.



Tag - தேன் சளி, தேன் பயன்கள், தேனை பயன்டுத்துவது எப்படி?, தேன் நன்மைகள், தேனின் பயன்கள், கொம்பு தேன் மருத்துவ பயன்,தேன் வகைகள், மலைத்தேன், சூரியகாந்தி புத்தேன், சதும்பப்பு தேன், நெறிஞ்சிப்பு தேன், சுத்தமான தேன்

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts