உழைக்கும்
உழைப்பின் வலி !
சம்பளம் வாங்கும், அந்நாளில்
வலி இன்பமாய் மாறுகிறது ..
வரவுக்கு மீறி செலவுதான் போட்டி போட்டு நிற்கிறது ..
வாழ்கையில் எப்படியாவது முன்னேறிவிடலாம்
என நினைத்து தொடங்கபட்ட
தொழில் அனைத்தும் ..
தோல்வியில்தான் முடிந்தது ..
மீண்டும் மீண்டும் நான் எடுக்கப்பட்ட முயற்சிகள்
தோல்வியில்தான் முற்று பெற்றது ..
இப்போதும் என்னை துரத்திக்கொண்டு வருகிறது
தோல்வியின் அடையாளமாய் "கடன்"..
பெறப்படும் சம்பளம்
கொடுக்கப்படும் கடனாய் மாறிவிட்டது ..
தோல்வி எனக்கு பல பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது ..
வெற்றியை தேடித்தான் சென்றுக்கொண்டிருக்கிறேன் .
என்னை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நீதான் தோல்வி அடைகிறாய் ..
ஏ தோல்வியே !
"உன்னை பல தடவை தொட்ட என்னால்
வெற்றியை ஒரு முறை கூடவா தொட முடியாது" !?..



நல்லதொரு சிந்தனை... ரசித்துப் படித்தேன்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅன்புக்குரிய என் அன்பான நண்பரே!
Deleteஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் !!