சிறுநீரக கல் பிரச்சனையா !? இதோ தீர்வு

 சிறுநீரக கல் பிரச்சனையா !? இதோ தீர்வு

இந்த சிறுநீரக கல் பிரச்சனை இப்போது நிறைய பேருக்கு வருகிறது அதற்காக நிறைய செலவும் செய்ய வேண்டி இருக்கிறது. நான் ஏற்கன சிறுநீரக கிட்னி கல் பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கிறேன், அதில் என் அனுபவத்தை சொல்லி இருக்கேன் மற்றும் இந்த பதிவு அதற்கான தீர்வு.



இந்த சிறுநீரக கல் உருவாக மூல காரணம் ?

பலர் பல காரணங்கள்  சொன்னாலும்  உண்மையில் இந்த சிறுநீரக கல் உருவாக மூல காரணம் குடிக்கும் தண்ணீர் சரியான அளவு எடுக்காததே காரணம். அலுவலகங்களில் மற்றும் பல வீடுகளில் AC இருக்கும் காரணத்தால், தண்ணீர் தாகம் அதிகம் எடுக்காததால் சரியான அளவு தண்ணீர் குடிப்பதில்லை.


சிறுநீரக கல் உருவாக மற்ற காரணங்கள் !

நீங்கள் உட்கொள்ளும் உணவு முறையும் கல் உருவாக காரணமாக உள்ளது. ஆம், இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பானிப்பூரி, அதிக மசாலா கலந்த அசைவ உணவுகள் மற்றும் யூரின்(Urine) வரும் நேரத்தில் போகாமல் அடக்குதல் போன்ற காரணத்தாலும் கல் உருவாகும். 


இந்த கல் பிரச்சனையால் நான் அளவு கடந்த வலியை அனுபவிச்சேன் அதாவது இதை விட ஒரு பெரிய வலி இருக்குமான்னு தெரியவில்லை.

பலமுறை வலியால் துடித்திருக்கிறேன். டாக்டர் ஆபரேஷன் செய்ய வேண்டும் ஏன் என்றால் உங்கள் கல்லின் அளவு 13.5 mm என்று சொல்லிவிட்டார்.

நான் கடைசியில் இது போன்ற நாட்டு மருந்துகளால் பயன் பெற்றேன். எனக்கு கல் உடைந்து Urine வழியாக வந்துவிட்டது.


கீழே கொடுக்கும் குறிப்புகளில் உங்களால் எது முடியுமோ, எது கிடைக்குமோ அதை பயன்படுத்துங்கள்.


சிறுநீரக கல் உடைய (Kindey Stone)

நெருஞ்சில் இலை மற்றும் மூக்கிரட்டை கீரை- நாட்டு மருந்து கடைகளில் நெருஞ்சில் பொடி மற்றும்  மூக்கிரட்டை பொடி கிடைக்கும், இந்த இரண்டு பொடிகளிலும்  ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் 200 ml தண்ணீரில் இந்த பொடிகள் மற்றும் தனியா அதாவது கொத்தமல்லி விதை 2 ஸ்பூன் போட்டு தண்ணீர் 100 ml வரும்வரை கொதிக்கவைத்து பிறகு மீதமான சூட்டில் வெறும் வயிற்றில் தினமும் குடிக்கவும்.

மாலையில் துளசி இலையை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் சாற்றை எடுத்து அதனுடன் தேவையான அளவு தேனை கலந்து குடிக்கவும்.

வாரத்தில் ஒரு முறை வாழைத்தண்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

தினம் ஒரு எலுமிச்சை ஜூஸ் அல்லது இளநீர் அல்லது சாத்துக்கொடி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலே சொல்லும் ஜூஸ் அனைத்தும் கல்லை கரைக்கும் மற்றும் கரும்பு ஜூஸ் கிடைத்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

முடிந்தவரை தண்ணீர் அதிகம் குடியுங்கள்.

குறிப்பு - நாட்டு தக்காளியில் விதை அதிகமாக இருக்கும் முடிந்தவரை அந்த விதைகளை தவிர்க்கவும்.

இந்த கல் கரைந்து வெளியே வரும்வரை காபியை குடிக்காமல் இருப்பது நல்லது.

இப்படி தினமும் செய்தால் நிச்சயம் கல் கரைந்து வெளியே வந்துவிடும்.


மேலும் கல் கரைய சில குறிப்புகள்



ரணகள்ளி செடியில் உள்ள இலைகளை வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு ஒரு இல்லை என்று 10 நாட்கள் சாப்பிட்டாலும் இந்த கிட்னி கல் கரையும்.

குறிப்பு - இந்த ரணகள்ளி செடி தெரிந்தவர்கள் மூலம் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது அமேசான் வெப்சைட்டில் கிடைக்கிறது.


சிறுகண் பீளை - சிறுபீளை அல்லது சிறுகண் பீளை சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.



நீர்முள்ளி - நீர்முள்ளி செடியை வேக வைத்த தண்ணீரை காலையும் மற்றும் மாலையிலும் குடிக்கணும்.

பீன்ஸ் - உணவில் பீன்ஸ் காயை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லி - வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த கொத்தமல்லி சூப் குடிக்கவும்.

 குறிப்பு - சிறுநீரக கல்லால் அதிக வலி எடுத்தால் 3 லெமன் ஒரே நேரத்தில் சாறு எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு அல்லது சர்க்கரை எதுவும் போடாமல் குடிக்கவும், இது வலியை குறைக்கும். 

 வாழைமர சாறு: வாழைமரத்தை வெட்டும்போது அதில் நடுவில் குழிபோல நொண்டி விட்டுவிடுவார்கள் அதில் ஊற்றுபோல தண்ணீர் வரும், அந்த தண்ணீரை பில்டர் செய்து வெறும் வயிற்றில் குடித்தால் கல் வரைய அதிகம் உதவும். 

நண்பர்களே! கல் பிரச்சனையில் அவதிப்படுபவருக்கு இந்த பதிவு மிக அவசியமாக இருக்கும், எனவே முடிந்தால் அவர்களுக்கு இந்த குறிப்புகளை சொல்லுங்கள்.



Tag - Home Remedies for Kidney Stones, kidney stone treatment, Kidney stones symptoms, How to pass kidney stones fast, What Are Kidney Stones, how to reduce the kidney stone in tamil, Kidney Stone Prevention, How to Pass Kidney Stones, Kidney stone pain relief tablets



1 Comments

  1. Thank you very much for providing how to treat kidney stones. I found it very useful. The urology specialist in Chennai gives treatment for problems related to the urinary tract and male reproductive system. The urology specialist provide the best treatment in Chennai and people believe in their services.

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts