வருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு !?

படத்தை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தேன் .
ட்ரைலர் காட்சிகள் அருமையாக இருக்கிறது
படம் எப்படி இருக்கும் என்று
தெரியவில்லை என்று சொல்லி இருந்தேன் !

கொஞ்ச நாளாக படங்களை பற்றி பதிவு எழுதவே  வெறுப்பாகி விட்டது,
ஏன் என்றால் படம் என்ற பெயரில் ரொம்ப மொக்கையாக இருந்ததால் ..

சரி இந்த வருத்த படாத படத்தை பற்றி சொல்லி விடுகிறேன் .

படம் ஏதோ கொஞ்சம் சிரிப்போடு, சுமாராக இருக்கும் என்றுதான் நினைத்தேன் .

சும்மா சொல்ல கூடாது ... படம் ஆரம்பம் முதல்
படம் முடிவு வரை சிரிப்போ சிரிப்புதான் ..
எப்போதும் போல சிவ கார்த்திகேயன் அழகாக  இருக்கிறார் ..
இளமையாய் ஜொலிக்கிறார் ..
அருமையாய் நடித்திருக்கிறார் .

படத்தில் கதை என்று எதுவும் பெரிதாய் சொல்ல முடியாது ..
ஆனால் படம் கலகலப்பாக செல்கிறது .
படத்தில் பரோட்டா சூரி நல்ல நடித்திருக்கிறார் .

கதா நாயகி பார்க்க சுமாரா இருந்தாலும்
பார்க்க பார்க்க அழகாய் தெரிகிறார் .

சத்யராஜ் மற்றும் எல்லோரின் நடிப்பும் அருமை ..

பாடல்கள் அருமையாய் இருக்கு ..
நீண்ட நாட்களுக்கு பிறகு கலகலப்பு படம் போல Entertainment படம் பார்த்தேன் .

பலரும் சிரித்துக்கொண்டே திரை அரங்கை விட்டு வெளி வந்தனர் .
பொதுவா நண்பர்களோடு பார்க்க  சென்றால்
சுமாரான படம் என்றாலும் கொஞ்சம் சிரித்து விட்டு வரலாம் .
ஆனால் இந்த படத்தை தனியாக பார்த்தாலும் சிரித்துவிட்டு வரலாம் .

Bore அடிக்காமல் கதை சிரிப்போடு நகர்கிறது .
குறை என்று ஏதும் சொல்வதற்கு இல்லை .

மொத்தத்தில் வருத்த படாத வாலிபர் சங்கம்
படம் எப்படி இருக்கு !

குடும்பத்தோடு சென்று ..
மகிழ்ச்சியோடு பாருங்க ..

வருத்த படாத வாலிபர் சங்கம் - சிரிப்புக்கு குறை இல்லா சங்கம்
















1 Comments

  1. நகைச்சுவைக்காக பார்க்கலாம்... நல்ல விமர்சனம்...

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts