
எதிர்பார்த்த படம் !
என்ன நேரமோ தெரியவில்லை
பல காரங்களால் படம் சொன்ன தேதியில் வெளிவரவில்லை !
சித்தூர் சென்று பார்க்கலாம் என்று நினைத்தால் எனக்கு
தெலுங்கில் பார்க்க விருப்பம் இல்லை .
சரி பெங்களூர் சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் .
சில காரங்களால் பணம் செலவு செய்துவிட்டேன் .
பிறகு இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து பார்த்தேன் .
முதல் பகுதியே பழைய படம் போல கதை நகர்ந்தது .
சரி போக போக கதை சூடு பிடிக்கும் என நினைத்தேன் .
ஆனால் என் கணிப்பு தவறு ..
படம் இடைவெளில்தான் ஒரு திருப்புமுனையில் சூடுபிடித்தது .
வாங்கன வணக்கங்க பாடல் மற்றும்
தலைவா பாடல் இரண்டும் அருமையாக இருந்தது .
அமலாபால் இளைமையோடு இருந்தாலும் என்னவோ
பிடிக்கவில்லை !
விஜய் மிகவும் அழகாக இருந்தார் .
இரண்டாம் பகுதி சற்று விறுவிறுப்பும் ..
சில இடங்களில் வெறுப்புடன் கதை நகர்ந்தது .
துப்பாக்கி படத்தை என்னை மறந்து ரசித்துபார்தேன் .
இந்த தலைவா படத்தை பார்த்து ரொம்ப வெறுப்பாகி விட்டேன் .
தெய்வ திருமகள் எடுத்த டைரக்டர் விஜய் அவர்கள் இப்படி படம் எடுத்தார் என்றால்
என்னால் நம்ப முடியவில்லை .

சந்தானம் காமெடி சொல்லும்படியாக இல்லை .
கதையின் கடைசி கட்டத்தில் மிகவும் ஒரு திருப்புமுனை விறுவிறுப்பை கொண்டுவந்தது .
இந்த படத்திற்கு ஏன் இந்த எதிர்ப்பு என்று தெரியவில்லை .
சொன்ன தினத்தில் படம் வெளியிட்டு இருந்தாலும்
தலைவா படம் ஓடி இருக்குமா என்று தெரியவில்லை .
மொத்தத்தில் தலைவா படம்
எப்படி இருக்கு !
தலைவா - இது வெறும் கனவு !