
இந்த படத்தை பார்க்கும் எண்ணம் சிறிது கூட இல்லை...
ட்ரைலர் காட்சிகளை பார்க்கும்போதுதான் ..
இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது ..
நினைத்தபடியே பார்த்தேன் ..
நான் எதிர் பார்த்ததைவிட ரொம்ப அதிகமாகவே
மன திருப்பி அடைந்தேன் .
அட டா டா படத்தின் தொடக்கம் முதல்
முடிவு வரை சின்னதாய் ஒரு சலிப்பு கூட ஏற்படவில்லை ..
சும்மா சொல்ல கூடாது ..
படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் ..
நயன்தாரா இந்த படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார் என்பதே நிஜம் ..
இப்போது பூத்த அழகான பனி மலர் போல காட்சி அளிக்கிறார் .
நயன்தாராவின் தந்தைதான் சத்தியராஜ் ..
இப்படி ஒரு தந்தை அமைவது என்பது வரத்திலும் பெரிய வரம் .
படத்தின் தீம் மியூசிக் சூப்பர் ....
அவ்வளவு அருமையாக இருக்கிறது ..
சந்தானத்தின் காமெடி சொல்லும்போதே சிரிப்புதான் வருகிறது..
காமெடி கிங் என்று சொல்லலாம் ...
எதிர் பாராத எதார்த்தமான வெகுளித்தனமான
சிறந்த நடிப்பு ஜெய் நடிப்பு ..
ஆர்யாவின் அசத்தல் நடிப்பும் சூப்பர் ..
நஸ்ரியா- வின் நடிப்பும் அசத்தல் ..
படத்திலே அதிகம் நடிப்பில் திகழ்ந்தவர் என்றால்
அது நயன்தாரா மட்டும்தான் ..


ஒரு கட்டத்தில் அவர் அழும்போதே ..
என் கண்களும் லேசாய் கலங்கியது ..
படத்தின் முடிவு மௌனராகம் படத்தின் முடிவு போல ..
அருமையாய் அமைந்தது ..
படத்தை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் ..
உங்களுக்கு கதை சொல்லகூடாது என்பதால் இதோடு முடித்துக்கொள்கிறேன்
மொத்தத்தில் "ராஜா ராணி" படம் எப்படி இருக்கு
அருமையான காதல் கதை ..


கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க ..
குடும்பத்தோடு பாருங்க ..
படத்தின் இயக்குனர் அட்லி
"ராஜா ராணி ..
அன்பும் பாசமும் "
பார்க்க வேண்டும்... ரசனையான விமர்சனம்...
ReplyDelete