திட்டம் இரண்டு Plan B - படம் எப்படி இருக்கு

 திட்டம் இரண்டு - Plan B

படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது, இந்த நடிகைதான் படத்தில் முக்கிய கதாபாத்திரம். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தை SonyLIV வெளியிட்டு இருக்கிறார்கள்.


இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இது ஒரு க்ரைம் ஸ்டோரி, படத்தில் இவர் சிறுவயதில் இருந்து பழகி வந்த தோழி ஒருத்தி விபத்தில் இறந்து விடுகிறாள் அது விபத்தல்ல ஒரு கொலை என்று சந்தேகிக்க. அதைத் தொடர்ந்துதான் கதை மெல்ல மெல்ல நகர்கிறது.

 ஆரம்பத்தில் சற்று ஏற்ற இறக்கத்துடன் சென்றாலும், போகப்போக படத்தின் விறுவிறுப்பு அதிகரிக்கிறது அதுமட்டுமில்லாமல் நமக்கு பல குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆம் யார்தான் கொலை செய்தார்கள் என்னதான் நடந்திருக்கும் என்று! 

படத்தில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்ப பார்ப்பதாக இருக்கிறது. இது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் படத்தில் பல திருப்புமுனைகள் அதிலும் முக்கியமாக கிளைமாக்ஸில் பெரும் திருப்புமுனை.

இது விபத்து தானா! அல்லது கொலையா! 

கொலை என்றால் யார் செய்தார்கள் எதற்கு செய்தார்கள்!

இந்த படத்தில் வரும் சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் அது அவரவர் மனநிலையைப் பொருத்து.

மொத்தத்தில் இந்த திட்டம் 2 படம் எப்படி இருக்கு! 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். படத்தின் கடைசி திருப்புமுனையை நான் எதிர்பார்க்கவில்லை! ஏன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மற்ற படங்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது.


படம் நல்லா இருக்கிறது நிச்சயம் பார்க்கலாம்.



இயக்குனர்: விக்னேஷ் சுப்பு 

படத்தின் மொத்த நிமிடங்கள்: 01h 57m




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts