ஆன்லைன் வேலை உண்மைதானா! சம்பாதிக்க முடியுமா!

 ஆன்லைன் வேலை உண்மையா! 

ஆன்லைனில் எவ்வளவு சம்பாதிக்கலாம் !!

அன்பு நண்பர்களே ஆன்லைன் வேலை என்பது உண்மைதான். அதுமட்டுமல்ல இதில் நிறையவே சம்பாதிக்க முடியும். இதில் நீங்கள் நினைக்கும் அளவிற்கு டைபிங் ஜாப், டிசைனிங் ஜாப், Form filling ஜாப் போன்றவற்றில் அதிகம் சம்பாதிக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல என்னதான் அதில் அதிகம் தொகை கொடுத்தாலும் சில மாதங்களில் இழுத்து மூடி விடுகிறார்கள் அந்த தளம் போலித்தனமாக மாறிவிடுகிறது.

Free online jobs

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வேலையை செய்கிறீர்கள். அந்த வேலைக்கு ஒரு நாளைக்கு 30 சென்ட் தருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அது நம்பக தரமாக தான் இருக்கும் பெரும்பாலும், ஆனால் அதில்  உங்களால் அதிகம் பணம் சம்பாதிக்க முடியாது உண்மைதானே! 

அதில் சம்பாதிக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுக்கு கீழே நிறைய நபர்களை இணைய வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை நம்பி நிறைய பேரை இணைய வைத்து விடுவீர்கள் அதில் பணம் கட்டாமல் இருந்தால் எதுவும் பிரச்சினை இல்லை அதுவே நீங்கள் பணம் கட்டி இருந்தால் மற்றும் உங்களை நம்பி உங்களுக்கு கீழே இணையும்  அவர்களும் பணம் கட்டி இருந்தால் அது சிறுதொகையோ அல்லது பெரும் தொகையோ!  பணமானது நல்ல முறையில் கிடைக்கப்பெற்றால் சிறந்தது. ஆனால், கிடைக்காமல் போனால் உறவுகளில் விரிசல் ஏற்படும் அவர்களும் ஏமாற்றம் அடைவார்கள், நீங்களும் ஏமாற்றும் அடைவீர்கள்.

சரி. அப்படி என்றால் அதில் அதிகமாக சம்பாதிக்க முடியும் அதுவும் ஆன்லைனில்!

யூடியூப் சேனல் (YouTube channel)



நீங்கள் நினைப்பது புரிகிறது ஆம் இப்போது யூடியூப் சேனல் என்பது நிறைய பேர் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல அதில் நிறைய பேர் தோற்றும் போகிறார்கள். அவர்களும் தோற்பதற்கு காரணம் அவர்களுக்கு சரியான வழிமுறைகள் தெரியாததுதான். அதுமட்டுமல்ல எல்லா வீடியோவும் இதில் பதிவேற்றி விடமுடியாது. இதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன.

 முன்பு தான் நமக்கு சொல்ல ஆள் இல்லாமல் போனது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே நீங்கள் யூட்யூபில் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். 'யூடியூப் சேனல் ஆரம்பிக்க என்னென்ன செய்ய வேண்டும்' என்று கேட்டால் கூட தமிழிலேயே கிடைக்கிறது. இதற்காக நீங்கள் செய்யவேண்டியது கொஞ்சம் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதற்காக உங்கள் வேலையை விட்டுவிட்டு இதை செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை உங்களுக்கு எது தெரியுமோ அதை செய்யுங்கள்.


YOUTUBE விதிமுறைகள்:



இதன் விதிமுறைகளை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் பிறகு யூடியூப் சேனலை ஆரம்பியுங்கள். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முன்பெல்லாம் ஒரு நிமிட வீடியோ அல்லது 2 நிமிட வீடியோ  என்று எதை வேண்டுமானாலும் நாம் இதில் அப்லோட் செய்து விட முடியும். இப்பொழுது அப்படியெல்லாம் அல்ல, அப்லோடு செய்யலாம். ஆனால் ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் வீடியோவை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதாவது, ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் வீடியோக்களை அவர்கள் Short வீடியோ என்று நிர்ணயம் செய்துள்ளனர். 



நீங்கள் Facebook மற்றும் யூடியூபில் அடுத்த வீடியோ எடுத்த வீடியோ என்று சிறு சிறு வீடியோக்கள் வரும் அல்லவா அதுதான் இந்த Short வீடியோ. 

எனவே, நீங்கள் அப்லோட் செய்யும் வீடியோ 3 நிமிடத்திற்கு மேலாக இருந்தால் சிறந்தது. அதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என்று பெரிதாக போட வேண்டிய அவசியமில்லை. 

நீங்கள் அப்லோட் செய்யப்படும் வீடியோ 'Copy Right content' ஆக இருக்கக் கூடாது. அதாவது, வேறு ஒருவர் ஏற்கனவே பதிவேற்றிய வீடியோக்களை நீங்கள் டவுன்லோட் செய்து, உங்கள் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ய கூடாது மற்றும் சினிமா படங்கள் போன்றவை சினிமா பட காட்சிகள், சினிமா பாடல்கள் என எவற்றையும் பதிவேற்றல் கூடாது.

மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மற்றவர் பதிவுகளை நீங்கள் எடுத்து உங்கள் சேனலில் பதிவேற்றல் கூடாது. 


நீங்கள் புதிதாக பதிவேற்றம் செய்தல் வேண்டும் அதாவது, ஊட்டி செல்கிறீர்கள் அல்லது கொடைக்கானல் செல்கிறீர்கள் என்றால் அதை ஒரு வீடியோ தொகுப்பாக எடுத்து அதற்கு பின்னால் உங்கள் குரல் கொடுத்து ஒரு வீடியோவாக தயார் செய்து அதை பதிவேற்றம் செய்யலாம். அல்லது உங்களுக்கு சமைக்க நன்றாக தெரியும் என்றால் ஒவ்வொன்றாக நீங்கள் சமைக்கும்போது, அதை அவ்வாறு செய்ய வேண்டும் என்று தெளிவாகவும் அழகாகவும் வீடியோ பதிவேற்றம் எடுக்கலாம். அல்லது உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் என்றாள் அதை வைத்து ஒரு வகுப்பு போல எடுக்கலாம் அல்லது உங்களுக்கு எது வருமோ அதை வைத்து வீடியோக்களை உருவாக்கலாம்.

YouTube இல்  சேனல் ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள். உங்களை பின்தொடர்பவர்கள். அதாவது, Subscriber 1000 பேருக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் பதிவேற்றும் வீடியோக்களை மொத்தமாக 4000 நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும். இதுதான் முக்கியமான விதிமுறை. இந்த விதிமுறை பூர்த்தி செய்தவுடன் தான் உங்களுக்கு Youtube monetization Enable ஆகும்.


YouTube ஏன் நமக்கு பணம் தருவார்கள்:

ஆம் நண்பர்களே நான் மேலே கூறியவாறு நீங்கள் அந்த விதிமுறைகளை பூர்த்தி செய்தவுடன்  உங்களை பின்தொடர்பவர்கள் ஆயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள் அதுமட்டுமல்ல உங்கள் வீடியோக்களை நாலாயிரம் நிமிடங்களில் பார்க்கப்பட்டு இருப்பதால் உங்கள் சேனல் ஓரளவிற்கு பிரபலமாகி இருக்கும். எனவே இனி நீங்கள் போடப்போகும் வீடியோவிற்கு YouTube நிறுவனம் உங்கள் வீடியோவில் விளம்பரங்களை சொருக அவர்கள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள்.


ஆயிரம் பார்வையாளர்கள் நம் வீடியோவை பார்த்தால் எவ்வளவு கிடைக்கும்: 

இதில் பொதுவாக ஆயிரம் பேர் பார்த்தால் இவ்வளவு கிடைக்கும் 10 ஆயிரம் பேர் பார்த்தால் இவ்வளவு கிடைக்கும் என்று நிர்ணயம் செய்ய முடியாது ஏனென்றால், இதில் வரும் விளம்பரங்களை பொறுத்துத்தான் மற்றும் அந்த விளம்பரத்தை கிளிக் செய்யும் அளவினை வைத்தும், அது மட்டுமில்லாமல் எந்த நாட்டில் இருந்து கிளிக் செய்கிறார்கள் என்பதை பொருத்தும் நமக்கு பணம்  பெரிய அளவிலும் சிறிய அளவிலும் கிடைக்கும். 


கிளிக் விழுந்தால் மட்டும்தான் பணம் கிடைக்குமா!

உங்கள் வீடியோவில் வரும் விளம்பரங்களில் கிளிக் விழவில்லை என்றாலும், பணம் கிடைக்கும். ஆம் மேலே கூறியவாறு 1000 Impression க்கு இவ்வளவு என்று ஒவ்வொரு நாட்டின் வருகை பொருத்து பணம் கிடைக்கும்.


YouTube Account Settings:

இதில் நீங்கள் வருமானம் ஈட்டித்தரும் தொடங்குவதற்கு முன் சில வற்றை தெளிவாக அவற்றில் பதிவிட வேண்டும். அதாவது உங்களுக்கு பத்து டாலர்கள் ஆனவுடன் உங்களுக்கென ஒரு பின் வெரிஃபிகேஷன் YouTube இல் இருந்து வரும். அந்தப் பின் எதற்காக என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரி சரியானதுதானா அந்த முகவரியில் நீங்கள் தான் இருக்கிறீர்களா என்பதற்காக ஒரு அடையாளம். அந்தப் Pin சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு 100 டாலர்கள் ஆனவுடன் நீங்கள் கொடுக்கப்பட்ட உங்கள் பேங்க் முகவரிக்கு அவர்கள் பணத்தினை அனுப்பிவிடுவார்கள் வரிகள் இதில் அடங்கும்.


YouTube channel - இல் எவ்வளவு சம்பாதிக்கலாம்:

இதில் ஓர் உண்மையை சொல்ல வேண்டுமெனறால், அளவில்லாமல் சம்பாதிக்கலாம் என்பது தான் நிஜம். அதற்கு ஏற்றவாறு நீங்கள் பதிவேற்றும் வீடியோக்கள் தரமானதாக இருக்க வேண்டும் அதாவது மக்கள் அதை விரும்பி பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இப்போது மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் 'Village cooking channel' மற்றும் 'Irfan's view' போன்றவர்கள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியை கண்டிருக்கிறார்கள். இந்த village cooking channel கொரானாவுக்காக, முதல்வரிடம் நிதியாக 10 லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். 

அவர்கள் ஒவ்வொரு வீடியோவும் கோடிக்கணக்கில் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இந்த யூடியூப் சேனலை பொருத்தவரை உங்களுக்கு தேவை பொறுமை மற்றும் விடாமுயற்சி மட்டுமே.


YouTube channel- இல் எந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது:

அரசியல் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய கூடாது மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி பேசக்கூடாது.

ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாசம் சம்பந்தப்பட்ட பதிவுகள் எதுவும் இருக்கக்கூடாது.

கத்தி மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள். அதாவது, சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மற்றவர் இந்த வீடியோவை பார்க்கும் அளவிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். கலவரத்தை தூண்டும் அளவிற்கு அல்லது முகம் சுழிக்கும் அளவிற்கு, மனதுக்கு வலியை கொடுக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.


வீடியோக்களை எப்படி பிரபலப்படுத்துவது:

உங்கள் வாட்ஸ் அப் மூலம் உங்கள் வீடியோ லிங்குகளை மற்றவர்களுக்கு பகிரலாம்.

நீங்கள் பதிவேற்றும் வீடியோக்களை உங்கள் முகப்பக்கம் நூலகத்தின் மூலம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஷேர் செய்யலாம்.

அதுமட்டுமில்லாமல் உங்கள் YouTube சேனலை 'Google adwords' மூலமாக விளம்பரம் செய்யலாம்.


YouTube channel டிப்ஸ்:



நீங்கள் ஒரு யூடியூப் சேனலில் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அதில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் ஒன்றன்பின் ஒன்று தொடர்பாக இருந்தால் மிகவும் நல்லது. அதாவது சமையல் குறிப்புகள் பற்றி சொல்கிறேன் என்றால் முழுக்க முழுக்க அந்த சேனல் சமையல் தொடர்பாக இருந்தால் நல்லது அல்லது சினிமாவை பற்றி சொல்கிறீர்கள் என்றால் முழுக்க முழுக்க சினிமா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இருந்தால் நல்லது அல்லது சுற்றுலா என்றால் சுற்றுலா சம்பந்தப்பட்ட வீடியோக்களை மட்டும் பதிவேற்றினால் நல்லது. ஒரு வீடியோ சுற்றுலாவை பற்றியும் மற்றொரு வீடியோ சமையலை பற்றியும் மற்றொரு வீடியோ சினிமாவைப் பற்றியும் இப்படி ஒவ்வொன்றாக மாறி மாறி இருந்தால் உங்களைப்  பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்.


ஒரு நாளைக்கு எவ்வளவு வீடியோ அப்லோட் செய்யலாம்:

உங்களுக்கு Content கிடைத்துவிட்டது என்று ஒவ்வொரு நாளைக்கும் 10 வீடியோக்கள் அல்லது 20 வீடியோக்கள் என்று பதிவிடாதீர்கள். முடிந்த வரை ஒரு நாளைக்கு ஒரு வீடியோ அல்லது 2 வீடியோ என்று பதிவிடுங்கள். எப்பொழுதும் உங்கள் சேனல் இயங்கிக் கொண்டிருப்பது போல இருக்க வேண்டும். ஒரே நாளைக்கு 10 வீடியோக்களை அப்லோடு செய்து விட்டு அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு எந்த வீடியோவும் அப்லோட் செய்யாமல் விட்டால் அதுவும் உங்கள்  சேனலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. 

நண்பர்களே, இதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இதுவே நான் நிறைய எழுதி விட்டதாக நினைக்கிறேன். ஆகையால் அடுத்தப்பதிவில் மேலும் தகவல்கள் எழுதுகிறேன்.


இந்த YouTube இல் மட்டுமல்ல Google Adsense- இல் கூட அதிகமாக சம்பாதிக்கலாம் இதைப் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடுகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருந்ததா! இல்லையா என்பது பற்றி கீழே கமெண்டில் பதிவிடவும். நன்றி.




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts