The Tomorrow War 2021 - படம் எப்படி இருக்கு
இந்த ஹாலிவுட் படம் ஆன்லைனில்(அமேசான்) வெளியிடப்பட்டது.
இதன் கதை பெரும்பாலும் அனைவருக்கும்தெரிந்திருக்கும், ஏன் என்றால் இதன் ட்ரைலரில் தெளிவாக தெரிகிறது... ஆம், இதுவும் ஏலியன்ஸ் சம்பந்தப்பட்ட படம்தான்.
எதிர்காலத்தில் சென்றடையும் அறிவியல் டெக்னாலாஜி மூலம் முப்பது வருடம் முன்னூக்கி சென்று இந்த உலகை ஏலியன்ஸ் அழிக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு, இந்த உலக அழிவில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. அதை எவ்வளவு விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்கள் என்பதுதான் சுவாரசியம்.
முதல் பகுதி ஆரவாரமில்லாம் சென்று, சில நிமிடங்களில் கதை சூடுப்பிடிக்கிறது..
இந்த ஹாலிவுட் படம் தமிழ் படங்களை போல 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ஆகும்.
நேரம் அதிகம் என்றாலும் ஆர்வம் குறையாமல் கதையை நகர்த்தி சென்றுக்கிறார் இயக்குனர் Chris McKay
இது புது கதை இல்லையென்றாலும், காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.
இரண்டாம் பகுதி கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடன், சென்டிமென்ட் காட்சிகளோடு கதை நகர்கிறது.
படத்தில் வரும் சில இயற்கை காட்சிகள் பார்க்க குளிர்ச்சியாய் இருக்கிறது.
மொத்தத்தில் இந்த The Tomorrow War 2021 படம் எப்படி இருக்கு.
படம் நல்லா இருக்கு! குடும்பத்தோடு பார்க்கலாம் எந்த ஒரு தவறான காட்சிகளும் இடம் பெறவில்லை.