இரு துருவம்(Iru Dhuruvam) பகுதி 1
இந்த வெப் சீரிஸ் "SONYLIV" வெளியிட்டு இருக்கிறார்கள்.
பொதுவாக இது போன்ற வெப் சீரிஸ்கள் உண்மை கதையை மைய்யமாக வைத்தே எடுப்பார்கள் இந்த கதை எப்படி என்று தெரியவில்லை.
இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிகர் நந்தா துரைராஜ்(வேலூர் மாவட்டம் படத்தில் ஹீரோவாக நடித்தவர்) மற்றும் BIGBOSS புகழ் அபிராமி ஐயர், SEBASTIN ANTONY நடித்திருக்கிறார்கள்.
இது ஒரு கிரைம் ஸ்டோரி, ஆரம்பத்திலே நந்தாவும் அவர் குழந்தையோடு கதை தொடங்குகிறது. மனைவி இருந்தார் இப்போது இல்லை என்பதுபோல கதை நகர்கிறது, இவர் ஒரு போலீஸ் (இன்ஸ்பெக்டர்) தன் மனைவி காணமால் போனதால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் 6 மாதங்களாக தன் குழந்தையை பார்த்துக்கொண்டு ஓய்வில் வீட்டிலேயே கழிக்கிறார்.. ஆனால் அவர் உயர் அதிகாரி இவரை தொடர்புக்கொண்டு ஒரு புதிய கொலைக்குற்றத்தை கண்டுப்பிடிக்க கேட்கிறார், ஆனால் இவர் மறுக்கிறார்.. மீண்டும் வற்புறுத்தி கேட்க இவர் அந்த கொலையை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
கொலைகாரன் கொலை செய்துவிட்டு அங்கே ஒரு திருக்குறளை எழுதிவிட்டு அதை கொலைசெய்யப்பட்டவரின் மொபைலில் வீடியோ எடுத்துவிட்டு, அந்த திருக்குறள் போலீஸ்க்கு தெரியும்படி தகவலும் விட்டு செல்கிறான்..
இதே போல தொடர் கொலைகள் நடக்கின்றன.. இதற்கிடையே நந்தா அவர் மனைவிடம் அன்பாக இருந்தது மற்றும் சண்டை போட்டது என்று சில பிளாஷ்பேக் காட்சிகளோடு கதை நகர்கிறது.
பொதுவாக படத்தில் கொலைகளை காட்டிவிட்டு யார் கொலைசெய்கிறார் என்று கடைசியாக சொல்வார்கள் ஆனால் இதில் கொலைகாரனை காட்டிவிட்டு அவன் ஏன் கொலைசெய்கிறான் என்று காட்டுகிறார்கள்.
இது ஒன்றும் புது கதை அல்ல.. அரைத்தமாவை அரைப்பதுப்போலத்தான்
கதை நல்ல கதை என்றாலும் ஒரு விறுவிறுப்போடு செல்லவில்லை..
கதை முழுவதும் காட்டிய சில முகங்களை மீண்டும் மீண்டும் காட்டுவதால் சலிப்புதான் வருகிறது.
கதையில் கொலைகாரன் மாட்டிக்கொண்டானா ..
மாட்டியவுடன் அவன் தப்பிட்டானா அல்லது இறந்துவிட்டானா ?
நந்தா மனைவி கிடைத்துவிட்டாரா, அவர் உயிரோடுதான் இருக்கிறாரா ?
கொலையாளி ஒருவனா அல்லது இவரா?
என்பதுதான் மீதி கதை..
மொத்தத்தில் இந்த இரு துருவம் படம் எப்படி இருக்கு..
நல்ல கதை என்றாலும் அதை விறுவிறுப்போடு எடுத்திருந்தால் நல்ல இருந்திருக்கும்.
படத்தின் மொத்த நிமிடங்கள் 3:41:47 ஆகும்.