மேதகு(Methagu) - படம் எப்படி இருக்கு !?

மேதகு திரைப்படத்தின் கதை தெருக்கூத்து நாடகம் மூலம் சொல்லப்படுகிறது..


நடந்து முடிந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த கதை.

ஆம், நண்பர்களே இது தமிழ் இனத்துக்காக இலங்கையில் போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் சென்ற வருடமே வெளியாக வேண்டியது, ஆனால் இந்த கொரோனா பெருந்த்தொற்றின் காரணமாக மற்றும் சில காரணங்களால் படம் தள்ளி போய் இந்த வருடம் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.


படத்தின் முதல் பகுதி பிரபாகரன் அவர்கள் பிறந்து வளரும் கதையும் மற்றும் தமிழ் இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் காட்சிகளோடு கதை நகர்கிறது.


படத்தின் சில காட்சிகள் மனதை புண்ப்படுத்துகிறது.. நடந்தைவை என்றாலும் மனம் என்னவோ வலிக்கத்தான் செய்கிறது..

பிரபாகரன் அவர்கள் சிறு வயதில் இப்படித்தான் இருந்திருப்பார்ப்போல, அதே போல முக சாயலைக்கொண்ட பையனை தேர்வு செய்திருக்கிறார்கள்.


படத்தின் பின்னணி மியூசி நன்றாக இருக்கிறது.

மேதகு படத்தின் மொத்த காட்சி நிமிடங்கள் 1:40:32.

இரண்டாம் பகுதி சிங்களவர்களை எதிர்க்கும் காட்சிகளோடு கதை நகர்கிறது.




உண்மையை கதையை மையமாக கொண்டு இருந்தாலும் .. விறுவிறுப்போடு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

படத்தின் ஒரு பகுதி மட்டுமே இது, இன்னும் பல பகுதிகள் வரும் என நினைக்கிறேன்.

படத்தின் பின்னணி கதைக்காக பலரிடம் கேட்டு அறிந்து பிறகே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏதோ ஒரு புத்தகத்தில் படித்துவிட்டு எடுக்கப்பட்ட கதை அல்ல இது ! இதற்க்கு சான்றாக படத்தின் முடிவில் "இத்திரைப்படம் உருவாக உதவு செய்த அன்பு நெஞ்சங்கள்" என்று பல பெயர்கள் இடம்பெறுகின்றன.  


மொத்தத்தில் இந்த மேதகு திரைப்படம் எப்படி இருக்கு !

பாதிக்கப்பட்டவருக்கு இது திரைப்படம் அல்ல காலம் கடந்த வலி!

மற்றவருக்கு கொஞ்சம் மெதுவாக செல்லும் 10-இல் ஒரு கதை.

இயக்குனர் - கிட்டு 

இசை - பிரவீன் 




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts