
எழுத மனம் இல்லை .
அந்த அளவுக்கு கொடுமையான படங்கள் இடையில் நான் பார்த்து வெறுப்பானேன் .
நல்ல வேலை தியேட்டரில் சென்று பார்க்கவில்லை
"எதோ செய்தாய் என்னை"
"எப்படி மனசுக்குள் வந்தாய் "
"18 வயசு"
போன்ற படங்களை பார்த்து ரொம்ப நொந்து போயிட்டேன் .
சரிங்க கோபப்படாதிங்க .. சுந்தர பாண்டியன் படத்தை பற்றி சொல்கிறேன்,
முதல் பகுதி காமெடி கலந்து கதை கொஞ்சம் நீளமாக செல்கிறது .!
ஆனால் சலிப்பு ஏற்படவில்லை .
சசிக்குமார் நல்ல நடிகர் ..
எப்போதும் கதைக்கு என்ன தேவையோ !
அதை மட்டும்தான் நடிப்பார் ஆனால் இந்த படத்தில் அவருக்காகவும் கொஞ்சம் நடித்திருக்கிறார் !
அடிக்கடி கையை தலைக்கு கொண்டு சென்று சீன் போடுவது கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கியது .

பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது .
படத்தில் நாயகி குடும்ப பெண்ணாக அழகாக நடித்திருக்கிறார் .

பரோட்டா காமெடி ல், புகழ்பெற்ற நடிகர் ..
இந்த படத்தில் அனைவரையும் சிரிக்கவைத்தார் .
இரண்டாம் பகுதி கதையில் கலை கட்டியது .
பல திருப்புமுனைகள் ..
சசிக்கு அப்பாவாக நடித்திருக்கும் நடிகரும் தன் நடிப்பை இயல்பாக நடித்திருக்கிறார் .


அனைவரும் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்கள் .
சசிக்குமார் கடைசியாக சொல்லும் வசனம் சூப்பர்
குத்தறதே நண்பனா இருக்கும் போது
உயிரே போனாலும் யார்கிட்டயும் சொல்லகூடாது ..


மொத்தத்தில் சுந்தர பாண்டியன் படம் எப்படி இருக்கு !!
குடும்பத்தோடு போய் பார்க்கலாம் ..
படம் நல்ல இருக்கு.


படத்தை பற்றி பல தவறான கருத்துக்களை ஆன்லைன்-ல் படித்தேன் ..
தரமான படத்தை தரக்குறைவாக எழுதாதிர்கள் ..
இந்த வாரம் படம் பார்க்க வேண்டும்...
ReplyDeleteகண்டிப்பா பாருங்க என் அருமை உறவே @
Delete