
ரொம்ப பிரச்சனை பண்றாங்க ...
கடைசி வரை படம் வருமா என்ற குழப்பத்தோடு படம் வந்தது ..
மீண்டும் முருகதாஸ் கூட்டணி என்பதால் துப்பாக்கி படத்தின்
வெற்றியை தொடர்ந்து இந்த கத்தி படம் மிகவும் எதிர்ப்பார்க்க பட்டது .
படத்தின் டீசர் சொல்லும்படியாக இல்லை .
ட்ரைலர் கூட ஓரளவுக்கு சொல்லும்படியாகத்தான் இருந்தது .
உண்மைய சொல்லனும்னா கத்தி படத்தின் டிக்கெட் வாங்க நான் பட்டபாடு
எனக்குதான் தெரியும் ..
முதல் பகுதி கொஞ்சம் காமெடியுடன் விறுவிறுப்புடன் கதை நகர்ந்தது ..
பாடல்கள் அருமை !
டான்ஸ் சூப்பர் !
இரண்டு விஜய் !
இரண்டு விஜய்க்கும் வித்தியாசம் அருமை !
விஜய் நடிப்பு சூப்பர் சூப்பர் !
இந்த கத்தியிலும் AM WAITING என்ற வார்த்தை இடம் பெறுகிறது
சண்டை காட்சிகள் அருமை !
இரண்டாம் பகுதி மிக அருமையாக அதே விறுவிறுப்புடன் நகர்கிறது .
சுருக்கமா சொல்லனும்னா ..
இந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் .
இந்த படம் விவசாயிகளுக்கு சமர்ப்பணம் ..
குடும்பத்தோட பாருங்க படம் அருமை !