வேலை இல்லா பட்டதாரி படம் முதல் நாள் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை .
ஆனால் அலுவலகத்தில் சாப்ட்வேர் வேலை செய்யாத காரணத்தால்
முதல் நாளே முதல் காட்சியே பார்க்க முடிந்தது ..
தனுஷ் அவர்கள் எப்போது கொலைவெறி பாடல் பாடினாரோ
மொத்தம் நான்கு திரை அரங்குகளில் வேலை இல்லா பட்டாதாரி வெளியிடப்பட்டுள்ளது .
இருந்தும் நான்கு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலை மொதுகிறது .
தனுஷிற்கு இவ்வளவு ரசிகர்களா ! oh god நம்ப முடியவில்லை ..
கதைக்கு ஏற்ற தலைப்பு !
முதல் பகுதி காமெடி+கலகலப்போடு கதை நகர்கிறது ..
அமலாபால் நடிப்பு எதார்த்தமாய் உள்ளது .
பாடல்கள் எல்லாமே அருமை ..
குறிப்பாய் வேலை இல்லா பட்டதாரி பாடல் இன்னும் அருமை !
தனுஷ் நடிப்பு அருமை !
இடைவேளையில் தனுஷ் அழுகும்போது
நடிப்பில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவார் போல !
தனுஷின் அப்பாவாக சமுத்திரகனி நல்ல நடித்திருக்கிறார் !
இரண்டாம் பகுதி வெறுப்பில்லாமல்
சலிப்பில்லாமல் கதை நகர்கிறது ..
B.E மாணவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் ...
குறிப்பாய் வேலை இல்லாதவர்க்கு ..
மொத்தத்தில்
வேலை இல்லா பட்டதாரி படம் எப்படி இருக்கு
குடும்பத்தோடு பார்த்துட்டு வாங்க படம் நல்ல இருக்கு