அதை விட சமந்த அப்ப்பப்பா பள்ளி கூட பெண்ணாகவே மாறிவிட்டார் .
அழகை தேவதை என்றே சொல்லலாம் ..
நீங்க நினைப்பது போல படத்தின் கதை என்று பெரிதாய் எதுவும் இல்லை .
பள்ளி கூடத்தில் தொடங்கிய காதல்,
வளர்ந்து வரும் தருணத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள்..
ஈகோ பிரச்னை .. கடைசியில் ஜீவாவும் சமந்தாவும் இணைந்தார்கள ?என்பதுதான் கதை .
படம் என்னவோ மிக மெதுவாகத்தான் நகர்கிறது ..
ஆனால் உணர்வுபூர்வமாக நடித்து இருக்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமானால்
நடிகை சமந்தாவை பாராட்டியே ஆகவேண்டும் அருமையாக நடித்திருக்கிறார் .
இந்த படத்தின் மூலம் நடிகை சமந்தாவின் Fan ஆகிவிட்டேன் .
பாடல்கள் அருமை !
முதல் முறை பார்த்த ஞாபகம் பாடல் . மற்றும் சற்று முன்பு பார்த்த மேகம் பாடல் அருமை அருமை !!
காதலர்களுக்கு இந்த படம் ஒரு உணர்வு ..
மற்றவர்களுக்கு எதோ பரவாயில்லை ..
மொத்தத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' படம் எப்படி இருக்கு
கதை மெதுவாக நகர்ந்தாலும் நான் ரசித்து பார்த்தேன் ..
உணர்வின் அழகான காதல் வெளிப்பாடே இந்த நீதானே என் பொன்வசந்தம்
