யாமிருக்க பயமேன் - படம் எப்படி இருக்கு !?

நண்பர்களே எனது கணினி சரி இல்லாததால் சரியா பதிவு எழுத முடியவில்லை .
படம் எப்பொழுதே பார்த்துவிட்டேன் இப்போதுதான் பதிவு எழுத முடிந்தது .

இந்த படம் திரையரங்கில் வெளியிட்டே எனக்கு தெரியாது ..
நண்பர்கள் சொல்லித்தான் இந்த படம் வந்ததே தெரியும் ..

படம் பேய் படம் என்பதை விட , அதிகம் சிரிக்கலாம் என்றார்கள்

சரி யாரிடம் கதை கேட்காமல் நண்பரோடு படம் பார்க்க சென்றேன் .

முதல் 30 நிமிடங்கள் கலகலப்பு இல்லாமல் கதை எதோ நகர்ந்தது ..
பிறகு ... கதையில் விறுவிறுப்பு கூடியது

விறுவிறுப்போடு கலகலப்பும் கூடியது ..

என்ன நடக்கிறது என்னதான் நடக்கிறது என்று புரியாமல்
கதை முழுவதும் தெரியாமல் சீரியசான விஷயம் கூட சிரிப்பாய் சிரிப்பாய் நகர்கிறது .

அதிக பாடல்கள் இல்லை, இந்த படத்திற்கு பாடல்கள் தேவையும் இல்லை,
பாடல்கள் ஏதும் சொல்லும்படியாக இல்லை .

படத்தில் இரட்டை அர்த்தங்கள் உள்ளது .
கவர்சிக்கு பஞ்சம் இல்லை .

இரண்டு ப்ளாஷ்பேக் கதையில் உள்ளது .
ஒன்று சிரிப்பு பிளாஷ்பேக் மற்றென்று கதைக்கான பிளாஷ்பேக் .

யாவரும் நலம் படத்தில் வருவது போல பேயை காண்பிக்காமல் கதையை நகர்த்தவில்லை ..

பல இடங்களில் பேயின் உருவத்தை காண்பிக்கிறார்கள் ..

கிளைமாக்ஸ் வரைக்கும் சிரிப்புதான் ..

நான் ரசித்து பார்த்தேன் ..


மொத்தத்தில் யாமிருக்க பயமேன் படம் எப்படி இருக்கு

கண்டிப்பா பாருங்க .. மனம் விட்டு சிரிச்சிட்டு வாங்க ..




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts