Tuesday, February 18, 2014

என் உயிரில் கலந்த ஒரு அழகான உணர்வின் உயிரோவியம் நீ

மனதார சொல்கிறேன் !
உன் மனதோடு சொல்கிறேன் !!

என்னை விட்டு பிரிந்துவிட்டாய் ..

புரிந்துக்கொள்ளாமல் பிரிந்திருந்தால்
என்னை பற்றி உன்னிடம் புரிய வைத்திருப்பேன் ..


புரிந்தே
என்னை பற்றி தெரிந்தே ,
பிரிந்த ..
உன்னிடம் என்னவென்று சொல்வது ..

உன் மௌனம் என்னை ஒவ்வொரு நொடியும்
கொள்கிறது



உனக்கு நான் வேண்டாம் என்பதால்
என்னை விட்டு விட்டாய் ..

நானும் உன்னை அப்படி விட்டுவிடுவேன் ..
ஆனால்  என்ன !
இந்த உலகில் என்னால் வாழ முடியாது !

என் உயிரில் கலந்த ஒரு அழகான 
உணர்வின் உயிரோவியம் நீ ..!

உன்னை நான் பிரிய நினைத்தால்
பிரிவது நீ மட்டுமல்ல
என் உயிரும்தான் ..

நொடி பொழுது கூட உனக்கு
என் நினைவு வரவில்லையா ?

வலிக்கிறது  உள்ளம் !

காலத்தின் நாட்களில் நகர்ந்துக்கொண்டிருக்கிறேன்
என் உயிரின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் .!

என்னை போல யாரையும் அன்பால் ஏமாற்றி விடாதே !
                                                                                                      - Gopi கண்ணன் 

1 comment:

  1. காலம் அனைத்து மாற்றத்தையும், ஆறுதலையும் கொடுக்கும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள