Tuesday, October 8, 2013

நன்றிக்கு நாய் என்றால் துரோகத்திற்கு நீயடி


தொலைந்துபோன என் வாழ்கையை
மாற்ற நினைக்கிறேன் !


சிரிப்பில் சில நாட்களும் 
அழுகையில் சில நாட்களும் கடந்து விட்டது ..

அன்பு காட்டிய உன்னை 
சோதித்தா பார்க்க முடியும் !
உன் அன்பு உண்மையா என்று ?

அப்போது தெரியவில்லை 
எல்லாம் நடிப்பு என்று ,,

அழுத நாட்களை நினைக்கும்போது 
என்மேல வெறுப்புதான் வருகிறது ...

உண்மை இல்லாத ஒருவளுக்காக 
உண்மையாய் அழுதுவிட்டோமே என்று !!

உன் வார்த்தை தவறியதால் 
என் வாழ்க்கை தவறியது ..


பரவாயில்லை அழுகையில் உணர முடியாததை 
இப்போது பொறுமையுடன் உணர்கிறேன் ..

எல்லாம் நன்மைக்கே என்று !


உன்னை நான் தேடி வந்திருந்தாள் கூட எனக்கு 
இவ்வளவு வலி தெரிந்திருக்காது ...

நீதான் வந்தாய் ..
ஆசையாய் சொன்னாய் ..
அன்பை  காட்டினாய் ...
என்னை அடியோடு மாற்றினாய் ..!

பாசத்திற்கு 
என் தாய் என்றால் 
நன்றிக்கு நாய் என்றால் 
துரோகத்திற்கு நீயடி ..

எல்லாமே மாறி போனது ..

உன்னை கண்மூடிதனமாக நம்பியதால் 
இப்போது கண்களை மூடிக்கொண்டு கண்கலங்குகிறேன் ..

நீ பாசம் என்ற வலையை வீசியதாலோ என்னவோ 
நான் பாதை மாறி செல்கிறேன் என்பதை கூட மறந்துவிட்டேன் ..

நான் உன்னை நேசித்தது உண்மைதான் ..
கண்டிப்பாய் உணர்வாய் 
உண்மையான பாசம் என்றால் என்ன என்பதை ..

உணராதவரை உண்மையும் ஒரு பொய்தான் !

பல அனுபவ பாடங்களை கற்று கொடுத்துவிட்டு சென்றுவிட்டாய் ...

சோகத்தையும் சந்தோஷமாய் மாற்றும் குணம் என்னிடம் உண்டு !
யாருமே இல்லை என்றாலும் 
எனக்காக நான் வாழ்வேன் ..

உன்னை மனைவியாக பார்த்தேன் 
தப்பு செய்துவிட்டேன்..

இனியாவது திருந்துகிறேன் 
என் மனைவியை 
காதலியாக பார்க்கிறேன் !

வாழ்க்கை வாழ்வதற்கே !!!



2 comments:

  1. நீங்களே உங்களை உணர்ந்து கொண்டது சரி...! வாழ்க்கை வாழ்வதற்கே !!!

    ReplyDelete
  2. துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள