Wednesday, October 23, 2013

உணர்வால் பிண்ணிப்பினைந்த அன்பின் உயிரோவியம் நீ

உயிருருவம் கொடுத்த என் உயிரானவரே !

நான் பிறந்து  வளர்ந்த
 இந்த நொடி வரை
அம்மா என்ற வார்த்தையைத்தான் அதிகமாக பயன்படுத்தி உள்ளேன் !

உன்னை விட பெரிய உறவும்
உண்மையான நண்பனும் எனக்கு கிடைக்க மாட்டான் ..

என் உறவும் நீதான்
என் உயிரும் நீதான் ..

ஒரு நாளைக்கு பல தடவையாவது
அம்மா என்ற அழகான கவிதையை  சொல்லி விடுவேன் !


எனக்கு அடிப்பட்டாலும் அம்மா என்று தான் துடிப்பேன் !

"உன்னை என்றுமே நான் நினைத்து பார்த்ததில்லை
ஏன் என்றால் உன்னை என்றுமே நான் மறந்து இருந்ததில்லை !

உணர்வால் பிண்ணிப்பினைந்த
அன்பின் உயிரோவியம் நீ !

மனதார சொல்கிறேன்  அம்மா ,
இந்த நொடி நான் வாழ்கிறேன் என்றால் அது
உனக்காகத்தான் !
உன்னால்தான் ...!!

ஆயிரம் பேர் என்னை வெறுத்தாலும் என்னை
என்றுமே வெறுக்காத உறவு என்றால் அது நீ மட்டும்தான் அம்மா ..

சாப்பிடும் போது சில முறை உன்னிடம் சத்தம் போட்டு இருக்கிறேன் ..
காரம் அதிகம் , உப்பு இல்லை என்று ..

இப்படி என்னாதான் நான் உன்மீது வெறுப்பை காட்டினாலும்
என் மீது அன்பை மட்டுமே காட்டியவள் நீ !

எவ்வளவோ நினைத்து பார்க்கிறேன்
என்  நினைவுக்கே வரவில்லை ..
  நான் குழந்தையாக இருந்து வளர்ந்த இந்த நொடி வரை
நீ என்னை அடித்தாக ..

அன்பின் உருவமும்
பாசத்தின் பாதையும் நீ மட்டுமே !

சொந்தம் ஆயிரம் இருக்கும்
பந்தம் ஆயிரம் இருக்கும்

சுயநலமில்லாத அன்பு என்றால் அது நீ மட்டும்தான் அம்மா !
                                                                                                                        - Gopikannan


1 comment:

  1. சிறப்பிற்கு சிறப்பு.... ரசித்துப் படித்தேன்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...

    நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே...

    விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள