Tuesday, October 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- படம் எப்படி இருக்கு !?

இப்போதுதான் படம் பார்த்தேன் ..
அதுவும் இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்துதான் பார்த்தேன் .

நல்ல படங்கள் பார்ப்பதில் அதிகம் விருப்பம் கொண்டவன் நான் .
மிஷ்கின் படம் முகமூடி தோல்வி அடைந்தாலோ அல்லது
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் போஸ்டர் சரி இல்லை என்பதாலோ என்னவோ தெரியவில்லை படத்தை தியேட்டரில் பார்க்க பிடிக்கவில்லை .


படம் பார்த்த இரண்டு நண்பர்கள் சொன்னார்கள் படம்
அவ்வளவு அருமையாக இருக்கிறது என்று ..!

என்னால் உண்மையா என்று நம்ப முடியவில்லை
என்னை வெறுப்பேற்ற சொல்கிறார்களா இல்லை உன்மைதானா என்று புரியவில்லை .!

நல்லதோ கெட்டதோ படத்தை டவுன்லோட் செய்தாவது பார்த்து விடலாம் என்று நேற்றே டவுன்லோட் செய்தேன் ஆனால் பார்க்க முடியவில்லை .

எப்படியோ இன்று பார்த்து விட்டேன் .

இப்போது வருந்துகிறேன் ஏன் தியேட்டரில் பார்க்காமல் தவறிவிட்டோம் என்று !

ஆம், விறுவிறுப்பான கதை என்று சொன்னால் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பொருந்தும் ..

படத்தின் இடைவெளி வரை கதையில் என்ன நடக்கிறது  என்று தெரியவில்லை
ஆனால் கதை மட்டும் விறுவிறுப்பாக நகர்கிறது ..

மனம் கவர்ந்த படத்திற்கு மட்டும்தான் நடு  இரவு என்றாலும்
படத்தை பற்றிய விமர்சனம் எழுதுவிட்டு உறங்குவேன் ..

உண்மையில் விறுவிறுப்பு நிறைந்த அடுத்து என்ன நடக்கும் என்ற
நினைப்புடன் கதை நகர்கிறது ..

உங்களிடம் சொல்லி கொள்வது ஒன்று மட்டும்தான்
படத்தை திரை அரங்கில் பாருங்கள் ..

மிஷ்கின் நல்ல நடித்திருக்கிறார் .


மிஸ்கின் பேட்டியில் சொன்னவரிகள்

"போஸ்டர் ஒட்ட  கூட இப்போது என்னிடம் காசு இல்லை என்றும்
facebook ,ட்விட்டர்  போன்றவற்றால் மட்டுமே இப்போது எதோ என் படம் கொஞ்சம் ஓடுகிறது என்றார் ".
----------------------

வித்தியாசமான கதை நிறைந்த படங்களுக்கு இது போன்ற தடைகள் வரக்கூடாது .

படம் பார்க்காதவர் கண்டிப்பாக பாருங்க திரை அரங்கில் .

இந்த பதிவு மூலம் ஒருவர் கூட பார்க்க மாட்டீர்களா ? ..

மொத்ததில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் எப்படி இருக்கு 

படத்தின் தலைப்பு ஏற்ற அருமையான கதை !










No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள