Sunday, June 23, 2013

உணர்வின் உளறல்கள் ..

உண்மையை சொல்லவா ..
என் மனதின் உள்ள வார்த்தைகளை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்
என்றுதான் நினைக்கிறேன் !

அது போல அழ எனக்கு உண்மையான உறவு இல்லை என்பதுதான் நிஜம் !
சோகமாக இருப்பவரை எனக்கு பிடிக்காது !
ஆனால் இன்றோ நானே சோகமாக இருக்கிறேன் என்பதுதான் நிஜம் !



உனக்கு திருமணம் நடந்துவிட்டது என நினைக்கிறேன் ..
வாழ்த்துக்கள் !
அதிக எதிர்பார்ப்புகள்தான் அதிக ஏமாற்றத்தை தரும் என்பார்கள் ..
அதிகம் எதிர்பார்த்துவிட்டேன் உன்னிடம் அன்பை !

அதனாலோ என்னாவோ ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை ..

உனக்கு என்மேல் காதல் வரும்போது நான் உன்னை புரிந்துக்கொள்ளவில்லை ..

உன்னை புரிந்துக்கொண்ட நாட்கள் முதல் நீ என்னை புரிந்தும் ..
புரியாததாய் !
 புரிந்தே பிரிந்து சென்றாய் !!

உண்மையை சொல்லவேண்டுமானால் நான் ஒருவனாய்
வெறுமையாய் நிற்கிறேன் !

உறவுகள் ஆயிரம் இருந்தாலும் உள்ளம் நேசித்தது உன்னைத்தானே ! அதான் தாங்கிக்கொள்ள முடியவில்லை !

எவ்வளவு சந்தோஷமாய் இருந்தாலும் காதலித்தால் அவன் மனம்
அடிக்கடி ! கண்இமை போல கலங்கிக்கொண்டே இருக்கும் என்பதை உணர்கிறேன் !

என் வரிகள் பலருக்கு புரியாது ஏன் என்றால் இது ஒரு
உணர்வின் உளறல்கள்.....................................................



1 comment:

  1. அனுபவம் உள்ள அனைவருக்கும் "வலிகள்" புரியும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள