Thursday, May 23, 2013

என் என்னவளே உனக்கு தெரியாத என்னை பற்றி !


என் என்னவளே உனக்கு தெரியாத என்னை பற்றி !
அன்பால் என்னை அழவைத்து விடலாம் என்று ..
இருந்தும் ஏன் இப்படி செய்தாய் !
வாழ்க்கை ஒரு முறைதான் அதை நல்ல முறையில் அல்லவா வாழலாம் என்று நினைதேன்..

நீயோ அதையேதான் நினைத்தாய் வாழ்க்கை ஒரு முறைதான் ..
ஆனால் அது ஏன் உன்னுடன் மட்டும் வாழ வேண்டும் என்று ..

உண்மையில் நான் நல்லவன் இல்லை 
என்றாலும் !
உன்னை என் உள்ளத்தில் வைத்தல்லவா பார்த்துக்கொண்டேன் ..
உறவுகளை காரணம் காட்டி பிரிய தெரிந்த உனக்கு ..
உயிர் போன்ற ஒருவனை பிரிய எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை ..
உண்மையில் நான் சோகங்களை பகிர்ந்துக்கொள்பவன்  அல்ல :
ஆனால் பாரேன் .. வாழ்க்கை எப்படியும் திருப்பும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் ..

ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்கிறேன் ..
யாரை வேண்டுமாலும் நேசிக்கலாம் .
ஆனால் உண்மையாய் மட்டும் நேசிக்க கூடாது ..
அமிர்தம் மட்டுமல்ல ..
அன்பும் அளவாய்  இருந்தால் அழ தேவையில்லை ..

அதிகமாய் எதிர்பார்த்துவிட்டேன் உன்னிடம்
எதிர்ப்பாராமல் இப்படி நடக்கும் என்று தெரியாமல் !!

உனக்காக நான் பலவற்றை இழந்தேன் என்பதுதான் நிஜம் ..
இனியும் இழக்க என்னிடம் உயிரை தவிர எதுவும் இல்லை ..
அதையும் இழக்க முயற்சி செய்தேன் உனக்காக !
அதிக அன்பு ஒருவனை முட்டாளாக்கும் என்பதை உணர்கிறேன் ..

இந்த எழுத்துகள் அனைத்தும் என் மனதில் அழுத்திவைக்கப்பட்ட 
மௌன வார்த்தைகள் ...

 

சில நேரங்களில் மௌனமும் பேசும் ..
பல நேரங்களில் வார்த்தைகள் கூட மௌனமாகத்தான் தெரியும் .
                                                                                        
                                                      -Gopi kannan

2 comments:

  1. அளவாய் இருந்தால் அதற்குப் பெயர் அன்பு அல்ல...

    அன்பை செலுத்துவது அன்பை பெறுவதற்கும் அல்ல...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பான உறவே !
      தங்கள் கருத்து முழுமையான உண்மை என்றாலும் ...
      என்னை போன்ற சிலருக்கு பொருந்தாது என்பதே நிஜம் ..
      அன்பால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தும் அன்புதான் ..
      அன்புக்கு நிகரும் அன்புதான் ..

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள