Sunday, May 12, 2013

ஆயிரம் இருந்தாலும் நீ என் காதலியல்லவா !

எத்தனை முறைதான்
   என் நினைவிலே 
                உன்னை தேடிக்கொண்டிருப்பேன் ..

ஒரு முறை , ஒரே ஒரு முறை உன்னை 
பார்க்க முடியாதா !!
நீயும் நானும் பிரிந்திருப்பது நிஜம்தான் ,
நிரந்த்தரபிரிவு என்பதும் நிஜம்தான்..
       ஆனால் , ஆயிரம் 
இருந்தாலும் நீ என்  காதலியல்லவா !

நாம் கடந்து வந்த நாட்களை நினைத்தால் , 
சில நேரங்களில் சிரிப்பும் 
பல நேரங்களில் அழுகையும் 
வந்து விடுகிறது ............
எங்கோ நீ இருக்கிறாய் 
எனை கண்டிப்பாக நினைப்பாய் என்று நம்புகிறேன் ..

பிரிவுக்கு மருந்து காலம்தான் ,
ஆம், மனதின் வலி குறைந்திருக்கிறது ..

என் மனதில் உன் நினைவுகள் பதிந்து விட்டது பச்சை குத்தியது போல ..

என்னமோ தெரியவில்லை உன்னை காண வேண்டும் 
உன்னிடம் சில வார்த்தைகளையாவது பேச வேண்டும் என்று 
என் மனம் விரும்புகிறது ..

முன்பை போல இப்பொழுதெல்லாம் அழுவதில்லை .

என் மனதுக்கு ஆறுதல் சொல்ல 
கற்றுக்கொண்டேன் .
ஆனால், அதையும் 
மீறி சில நாட்களில் தனிமையில் கண்ணீர் வந்து விடுகிறது .
அன்பே 
 உணர்ந்து சொல்கிறேன் !
உனக்கு எப்படியோ? தெரியவில்லை !
நீ இல்லாத வாழ்க்கை 
நரகமாகத்தான் செல்கிறது ...
சந்தோஷமாக இருப்பதாக 
நானே நடித்துக்கொண்டிருக்கிறேன் !
ஆனால் !உண்மையில் !

என்னை கட்டுபடுத்த தெரிந்த எனக்கு 
என் உணர்வுகளை கட்டுபடுத்த தெரியவில்லை ,
அவை ,
இன்னும் உன்னைத்தான் , உன் 
அன்பைத்தான் எதிர்ப்பார்க்கின்றன.
நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும் 
என் நினைவுகள் உன்னை 
மட்டுமே 
தேடிக்கொண்டிருக்கும் என்பதை, மறந்தும் 
மறந்து விடாதே !
                          -கண்ணன் -Gk 
  

3 comments:

  1. அதனால் தான் பகிர்வுகளே வரவில்லையோ...?

    எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு...

    இல்லை இல்லை... நான் கவிதையாகவே எடுத்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா .... அப்படியெல்லாம் இல்லை நண்பரே !
      நெட் பில் கட்டவில்லை அதான் ...........

      Delete
  2. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள