Sunday, November 18, 2012

முட்டாள்களை எனக்கு பிடிக்காது ... ஹா ஹா .. இன்று நானும் ஒரு முட்டாள்தான்

என்னதான் சந்தோஷமாய்  இருந்தாலும்
உன் பிரிவால் நிலை குலைந்த மனம் .
பாவமடி ..
இன்னும் பிரிவின் வலி குறையாமல் தவித்துக்கொண்டிருக்கிறது .
வருடங்கள் கடந்தாலும் ..
வலி மட்டும் குறையவில்லை ..
நீ என் காதலி என்பதற்காகவும்

நான் உன்னை காதலித்தேன் என்பதற்காகவும் .

நீ என்னை விட்டு பிரிந்தது குற்றம் என்று சொல்லாமல் இருக்க முடியாது .
இன்று உன் மனதில் ஒருவன்  இருக்கிறான் என்பதை கேள்விப்படவில்லை ..
நானே அறிந்தேன்.
கோபம் வந்தது உன்மேல் அல்ல ..
என்மேல்தான் ..
முட்டாள்களை எனக்கு பிடிக்காது ... ஹா ஹா .. இன்று நானும் ஒரு முட்டாள்தான் .
அதனால்தானோ என்னவோ என்னை நானே வெறுக்கிறேன்.

நீ உண்மையாய் நேசிக்கும் உள்ளம் உனக்கு துரோகம் செய்யும் போது என் வலியை நீ உணர்வாய் .

நீ எனக்கு செய்த துரோகம் கூட நல்லதாக நினைக்கிறேன்.
உன்னை மறக்க முயற்சி செய்து தோற்ற நான் .
இப்போது அனைத்து நினைவுகளையும் வெறுத்து கடந்து வருகிறேன் எனது வாழ்க்கை பாதையில் ..

இப்போது எனக்கு தேவை எது தெரியுமா ?
மன நிம்மதி ..
சில அறியாத விஷயங்கள் கேள்வி-பட்டவுடன் தலை சுற்றுவது போல இருந்தது .
கலங்கியது என் கண்கள் ..
மனகட்டுபாட்டால் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன் ..
கண்ணீர் சிந்தவில்லை ..
உன்மேல் ஏற்பட்ட வெறுப்பால் ..
சில நாட்கள் தனிமையோடு பொழுதை கழித்தேன் .

நல்லதோ கெட்டதோ ..
உன்மேல் எனக்கு ஏற்பட்ட வெறுப்பு .
உன்னை மறக்க எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ..


உன் வாழ்கையை சந்தோஷமாய்  வாழ் .
இனியாவது என் வாழ்கையை தேடி செல்கிறேன்.
உன் திருமணதிற்கு என்
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
 

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள