Thursday, October 4, 2012

பிரிவின் நினைவுகள் என்னை தூண்டும்போதெல்லாம்


தொலைந்த நினைவுகள்
மீண்டும்
நினைவுக்கு வர
வலிக்கிறது மனம் ,
அவள் நினைத்திருப்பாள்
நம்மை தொடர்புகொள்ளவில்லை !
அவன் நம்மை நிஜமாய் நேசித்திருப்பான என்று !?

நாம் அருகில் இருந்த போதுதான் அடிக்கடி சண்டை !
என்னை பிரிந்திருக்கும் இந்த தருணத்திலாவது
உனக்கு பிடித்ததை செய்ய நினைகிறேன்.

நீ என்னிடம் ஆசை பட்டு கேட்டு கொண்டது ,
என்னை கஷ்ட படுத்தாதே என்றுதானே  !

பிரிவின் நினைவுகள்
என்னை தூண்டும்போதெல்லாம்
கவிதை வடிவில் எழுத்துக்களோடு
என் கண்ணீரையும் சிந்தி விடுகிறேன் ,
உன்னை தொந்தரவு செய்ய நினைப்பதில்லை !
பழகிவிட்டது இந்த வலி
இருந்தும் ஏனோ புதுமையாய் வலிக்கிறது மனம் .

2 comments:

  1. இவ்வாறு எழுதினாலும் வலி குறைவதில்லை... (உண்மை)

    ReplyDelete
  2. romba urukamai irukunga ithu

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள