Thursday, October 18, 2012

கேள்வி பட்டேன் என் காதலிக்கு திருமணமாம் !!


நட்பில் தொடங்கி
காதலில் மலர்ந்து
திருமணத்தில் முடிகிறது ..

நட்பு என்னோடு
காதல் என்னோடு
ஆனால்
திருமணம் என்னோடு அல்ல !


அழகாக இருப்பதால் உனக்கு இவ்வளவு அகங்காரம் கூடாது பெண்ணே !
ஆடையை மாற்றுவதுபோல் ஆளையே மாற்றிவிட்டாயே !

உன்னால் பெண்கள் மீதே வெறுப்பு வருகிறது .

ஏனடி இப்படி இருக்கிறீர்கள் !

என் வலிகளின் வரிகள் .
மௌனத்தின் சத்தம்
கண்ணீரின் கத்தல் ..
கவிதைகளில் கதறல் ..

எல்லாமே  உனக்கு ஒரு நாடகம் போலதான்
என் சோகங்கள் அனைத்தும்  உனக்கு தெரியும் ,
வருந்துவாய் ..
அதுவும் நடிப்பாய் ..
மற்றபடி நான் உனக்கு ஒரு பொழுதுப்போக்குதான்  ..

மனம் திறந்து சொன்னாய் பல பொய்களை ...
நானும் நம்பினேன் .
மற்ற பெண்களை போல நான் அல்ல என்றாய் ..
சத்தியமாய் அது உண்மை
மற்ற பெண்களை போல அல்ல என்பதை விட
நீ பெண்ணே அல்ல என்பதே பொருந்தும் ..

விடை தெரியாத பல கேள்விகளுக்கு
நீ அழுதே பதில் சொன்னாய் !
அதில்தான் நான் அதிகம் விழுந்தது ..

உனக்கு பாவம் பார்த்த நான் :
இன்றோ !
 நான் பாவமாய் நிற்கிறேன் ..

வலிகளுடன் சொல்கிறேன்
இப்போது கூட
ஏனோ
 உன்னை!
  மனம் திறந்து, திட்ட மனம் இல்லை ..

என்னை படத்தில் வரும் ஹீரோ என்று நினைத்து விட்டாய் போல !
உன்னை வாழ்த்திவிட்டு செல்வேன் என்று நினைக்கிறாயா ?
எனக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை.

என் வலிகள் உனக்கு புதிது அல்ல !
இருந்தும் ஏன் இந்த புலம்பல் என்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறேன் .

மௌனமான வார்த்தைகள்
கண்ணீருடன் வெளிவருகிறது .


உன் சம்மத்தோடு  திருமணம் நடக்கிறது என்று நினைக்கும்போதுதான் வலிக்கிறது ..
அதுவும் காதல் திருமணம் என்று கேள்விப்பட்ட-உடன் மனம் உடைந்து போனேன் .

என்னை மற்றவர்களுடன் நீ சொல்லும் உறவை கேள்விபட்டேன் ...
நான் உனக்கு JUST FRIEND !

அருமை அருமை .. Just friend க்கு ஏனடி I love U என்று சொன்னார்
முத்தம் கொடுத்தாய்!
கட்டிபுடித்தாய்!
புருஷன் என்று அழைத்தாய் !
கடைசி வரை நீ வேண்டும் என்றாய் !
உன்னோடு வாழ வேண்டும் என்றாய் !!
பல பல அன்பு வார்த்தைகள் சொன்னாய் நான்  நம்பும்படியாக !!

பிண்ணி பிணைந்த நம் காதல்
"ஒரு பிணம்" !
மன்னித்துகொள் எனக்கு மட்டுமே அது காதல் !
உனக்கு வேறு !

நான் உன்மேல் வைத்த காதலின் ஆழத்தையும்
நீ எனக்கு பண்ணிய துரோகத்தையும்
முழுமையாய் வெளிபடுத்தினால்
வயதுக்கு வராத பையன் கூட உன்னை காரி துப்பிவிட்டு செல்வான் .

உனக்கு ஒரு காதல் போதாதோ !?

போதுமடி உன்னால் நான்பட்ட காதல் காயம் !
ஒருமுறை செய்த தவறுக்கு
எத்தனை முறை தண்டனை அனுபவிப்பது ..

யாரையாவது திருமணம் செய்துக்கொள் !
அவனுக்காகவது துரோகம் செய்யாமல் இரு .

சில நேரங்களில் நிஜத்தை விட நிழல்தான்
நிஜம்போல தோற்றம் அளிக்கும் .
நிழலாகிய உன்னை நிஜம் என்று நம்பினேன் .

நம்பிக்கைக்கு  எனக்கு கிடைத்த  நல்ல பரிசுகள்
கண்ணீர் ,கவலை, ஏமாற்றம் ,

நீ செய்த பல நம்பிக்கை  துரோகங்களை
என் மனதில் ஆழமாய் புதைத்துவிட்டேன் ..

எல்லாவற்றையும் அறிந்து தெரிந்து பின் புரிந்து
கடைசியாய் ஒன்று சொல்கிறேன் .

இந்த உலகத்தில் சிறந்த நடிகை என்றால் அது நீ மட்டும்தான் .

காதல் வேண்டாம் என்று சொல்லவில்லை
காதலி வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் .

காதல் காயங்களுடன் "கண்ணன்"

2 comments:

  1. arumai,ullathai urukkum unmaiyaana varigal...

    ReplyDelete
  2. காயங்கள் ஆற சிறிது நாட்கள் ஆகும்...

    'அவர்கள் நன்றாக இருக்கட்டும்' என்கிற நல்ல மனம் ஒன்றே போதும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள