Friday, October 12, 2012

பாரேன் இதான் காதலா ! அல்லது இதான் வாழ்க்கையா ?



நாம்  என்று  இருந்த  நம்முடைய  காலத்தில்
நான்  நினைத்து  பார்த்தது  என்ன  தெரியுமா !

நான்  இல்லாமல்  நீ  இல்லை .

நான்  இல்லாமல்  உன்னால்  ஒரு  நொடி  கூட
வாழ   முடியாது
  என்று  .


ஒரு  நாள்  தவறாமல்
நம்  உணர்வுகளை  பகிர்ந்துக்கொள்வோம்


ஒரு  மணி  நேரத்திற்கு  ஒரு  முறையாவது
பேசிக்கொள்வோம்

ஏன்  ஒவ்வொரு  நொடியும்  நினைத்துக்கொள்வோம் .

நாம்  அன்பில்  சிறந்தவர்கள்  என்று  எண்ணினேன் .

இப்போது  நிலைமை  வேறு !!..

நீ  எங்கோ
நான்  எங்கோ ,

உன்  குரலை  கேட்பது  கூட  ஆபூர்வம் ..
உன்னை  நேரில்  பார்ப்பது  அதிசயம் ..

பாரேன்  இதான்  காதலா !
அல்லது
இதான்  வாழ்க்கையா ?
நினைத்ததை  தவிர  எல்லாம்  நடக்கிறது ..
அதற்க்கு  பெயர்  வாழ்க்கையாம்  !

உண்மையில்  நீ  மனமகிழ்வோடுதான்  இருப்பாய் .

என்னுள்  கலந்த
என்னுயிரில்  கரைந்தவளே  !

என்  நினைவுகள்
உன்  நினைவலைகளுக்குள்  வந்து  செல்வதில்லையா ..



காற்றில்  கரைந்த  கண்ணீர்  போலதானா   ?!
என்  நினைவுகளும் .!


உன்னை  போல  என்னால்  ஏனோ  இருக்க  முடியவில்லை  ..

அடிக்கடி  உன்  நினைவில்  மெழுகுவர்த்தி  போல  உருகி  சிதைகிறேன் ..

உன்னை  திட்ட  மனம்  இல்லாமல்

அந்த  இறைவனை   பழிதீர்க்கிறேன்  .

சிலரின்  நம்பிக்கைகாக

என்  காதலையும்
நீ  என்  காதலி  என்பதையும்

சில  நொடிகளில்  மறந்து  விட்டாயே !

இதுதான்

உண்மையான  காதல்  என்றால்  !

சத்தியமாய்  அந்த  காதலை  நான்  வெறுக்கிறேன் .

1 comment:

  1. என்ன இப்படி ஒரு சோகம்...!

    வெறுக்கலாம்... மறக்க முடியாது...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள