Monday, September 3, 2012

இதான் வாழ்க்கையா ? அவ்வளவுதானா வாழ்க்கை ?

உலகில்  எத்தனை  பேர்  பிறக்கிறார்கள் ! 

எத்தனை  பேர்  இறக்கிறார்கள் ..

இந்த  உலகில்  பல  கோடி  பேர்  இருந்தாலும்  
அனைவருக்கும்  தெரிந்தவர்கள்  சிலரே !

"நம்மை"  மிஞ்சி  போனால்  எத்தனை  பேருக்கு  தெரியும்  
100 பேருக்கு  
1000 பேருக்கு  
10000 பேருக்கு , ஏன்  
100000 பேருக்கு  தெரியுமா ?

கண்டிப்பாக  தெரியாது  ஏன்  என்றால்  நாம்  
எந்த  சாதனையும்  புரிந்து  விடவில்லை  !
வழக்கம்  போல  உறங்குவதும்  
விழிப்பதும்  ,
சாப்பிடுவதும் ..
வேலைக்கு  செல்வதும் ..
அவ்வளவுதானா    வாழ்க்கை  ?

இந்த  வாழ்கையை  வாழத்தான்  பிறந்தோமா  ?

நம்மிடம்    ஒரு  தனித்துவம்  கிடையாதா !

எல்லோரும்  போல-தான்  வாழ்வதும்  ..
பின்  மண்ணில்  மடிவதும் ..

இதான்  வாழ்க்கையா ?

வலிக்கிறது  மனம்  
ஏன்  என்றால்!  என்  வாழ்க்கை  பயணம்  இப்போது  இப்படிதான்  
சென்றுக்கொண்டிருக்கிறது ..

டாட்டா 
அம்பானி 
பில்கேட்ஸ் ..
ஹிட்லர் 
சச்சின் .
போன்றவர்களை  உலகமே  அறியும் ..

காந்தி ,,
சுபாஷ்  சந்திரபோஸ் ..

போன்றோரை    இந்தியாவே  அறியும் .
MGR   
ரஜினி 
கமல்  
கருணாநிதி 
ஜெயலலிதா .

போன்றோரை  தமிழ்நாடே  அறியும் ...
"எத்தனை  சோதனை  வந்தாலும் 
சாதிக்க  வேண்டும்  
என்ற  போதனை  மட்டும்  
நமக்குள்  ஏன்  வரவில்லை"  !!


நம்மை  எல்லோருக்கும்  தெரியாவிட்டாலும்  பரவாயில்லை  .
நாம்  சாதனை  புரியாவிட்டாலும்  தவறில்லை  ..
ஆனால் !
தன்  கடமையை  கூட  செய்யாதவர்கள்  பலரை  பார்க்கிறேன் .

ஒரு  வயதிற்கு-மேல்  
தன்  சொந்த    உழைப்பில்    அல்லவா  உன்ன  வேண்டும் ..

விவேக்  ஒரு  படத்தில்  சொல்வது - போல 
"வெட்டி  முண்டம்  
வீனா  போன  தண்டம்" ..

இப்படியும் 
சிலர்  அல்ல  பலர்  இருக்கிறார்கள் ..

உண்பதும்  உறங்குவதும் .
வேலைக்கு செல்லாமல் இருப்பதும் 
கெட்ட நண்பரை  பார்ப்பதும் 
தண்ணி  அடிப்பதும் 
சினிமாவுக்கு  செல்வதும் ..
நேரம்  பொன்னானது  என்பதை  உணராதவர்கள் ..

ஆட்டோவில்  நான்  படித்த  வாசகம் 
உன்ன  மறந்தாலும் 
உழைக்க    மறக்காதே !
தகுதிக்கு  ஏற்ற  வேலைதான்  வேண்டும்  என்றால் 
நாட்டில்  பாதி  பேருக்கு  வேலை  இல்லாமலே  போகிவிடும்   ..

நேரத்தை  வீணடிக்கும் 
இளைஞ்ர்களே 
உங்களுக்கு  சொல்வது  ஒன்றுதான் ..

கண்  சிமிட்டும்  நேரம்  போனால்  கூட  மீண்டும்  வராது ..
           

3 comments:

  1. மனம் கவர்ந்த பதிவு... பாராட்ட வார்த்தைகள் இல்லை...

    படங்களே ஆயிரம் தகவல்கள் சொல்லுதே... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனம் கவர்ந்த பதிவு என்கிறீர்கள்
      மனம் நிறைவு அடைகிறது .
      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete
  2. உண்மையை உணர்த்தும் உணர்ச்சிகரமான வரிகள்... பயனுள்ள பதிவு...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள