Sunday, September 2, 2012

உன்னை நினைத்துதான் இந்த வரிகள் கூட எழுதுக்கிறேன்

உன்  நினைவில்லை  என்று
என்னை  நான்  சமாதானம்  படுத்திக்கொண்டாலும்
உன்னை  நினைத்துதான்  இந்த  வரிகள்  கூட  எழுதுக்கிறேன் .
என்னுள்  கலந்த
என்னுள்  கரைந்த
என்னுயிர்  காதலியே !


நம்பி  கெட்டவன்  பெயரில்
என்னையும்  இணைத்துவிட்டார்கள்
ஆம் ,
நான்  காதல்  தோல்வி  அடைந்தவனாம் ..

நம்  காதல்  யாருக்கும்  தெரியகூடாது  என்று  சொன்னாய் ..
நீ  சொன்னது  போலவே  யாருக்கும்  தெரியாமலே  போனது  நம்  காதல் !!.

நீ  என்னை  பிரிந்து  விட்டதால்
என்  உயிர்  என்னை  விட்டு  சென்று  விட-வில்லை .

ஆனால் !

மனம்  உடைந்து  போனேன் .
சில  நாட்கள்  கண்ணீரிலும்
சில  நாட்கள்  தண்ணீரிலும்  கரைந்து-போனேன் .

கடந்து  போன  பல  நினைவுகளை
மீண்டும்  அசைப்போட்டு    பார்த்தேன் ..

நீ  அவ்வளவு  அழகு  என்றாலும்
உன்னை  அடைய  நான்  ஆசை  படவில்லையே !!

உன்னை  பற்றியும் ..
உன்  குடும்பத்தை  பற்றியும்
நீ  முழுமையாக  சொல்லிய-உடன்

நான்  சொன்ன  வார்த்தை  நினைவிருக்கிறதா ?

நாம்  பிரிந்து  விடலாம்  என்றேன் ..
உன்னிடம்  பேசாமல்  கூட  இருந்தேனே ..

அப்போதே  பிரிந்திருந்தால்
இன்று  நான்  இப்படி  இருந்திருக்கமாட்டேன் .

நீ  இல்லமால்  என்னால்  இருக்க  முடியாது  என்றல்லவா
அழுதாய் ..

உன்  அழுகைக்கு  ஆறுதல்  சொல்ல  வந்தவனாய்
அன்று  நான்  இருந்தேன் ..

இன்றோ  நான்  அழுகிறேன் ..
ஆறுதல்-இன்றி   தனிமையில்  தனிமையாய் ..

மனம்  விட்டு  சிரிக்க  வைத்தேன் ..
நீ  அழக்கூடாது  என்பதற்காக  ..

உன்னை  அன்பால்  அழவைத்தேன் ..
என்னை  பிரிந்து  விட  கூடாது  என்பதற்காக ..

நான்  நினைத்தது   போலதான்  நடந்தது  ..

சிரித்துக்கொண்டுதான்  இருக்கிறாய் ..
என்னை  அழவைத்து  விட்டு ..

பிரியாமல்-தான்  இருக்கிறாய்
என்  கையில்  குத்தப்பட்ட  பச்சை  எழுத்துகளாய்  மட்டும் ..

உன்னை   நினைத்து  எழுதுவதால்
என்னை  போலவே  என்  வரிகளும்  தட்டு-தடுமாறுகிறது ..

என்ன  எழுதுவது  என்று  தெரியாமல்
எழுத்துகளுக்கு  முற்று  புள்ளி-வைக்கிறேன்  இப்போது  மட்டும் .
 
 

3 comments:

  1. என்ன எழுதுவதென்றே தெரியலே...

    ஒரு காதல் கதையை கவிதையாய் வடித்துள்ளீர்கள்...

    கதையாய் இருக்க சான்சே இல்லை... உண்மை என்றால் தான் இவ்வாறு எழுத முடியும்... (அதுவும் எல்லாவற்றையும் உண்மையாக)

    ReplyDelete
    Replies
    1. உணர்வுகளை உண்மையாய் புரிந்துக்கொண்டமைக்கு கண்ணீர் கலந்த கலந்த நன்றிகள் !!

      Delete
  2. காதலில் தோல்வி நல்லது நண்பரே. காதல் தோல்வி என்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் கவிதை பஞ்சம் தலை விரித்து ஆடியிருக்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள