Saturday, August 25, 2012

மறந்திருந்தாலும் ஒரு முறை நினைத்து பார் .. உன் கண்ணீரில் கரைந்து வருவேன் ..



பேசும்  தருணத்தில்  நான்  அடிக்கடி  உன்னிடம்  சொல்லுவேன் 
நீ  என்  செல்ல  குழந்தை  என்று 
பெண்ணே !
உனக்கு  நினைவிருக்கும்  என்று  நினைக்கிறேன் ..

மறந்திருந்தாலும்  ஒரு  முறை  நினைத்து  பார்  ..
உன்  கண்ணீரில்  கரைந்து  வருவேன் ..
உன்  மழலையான  குறும்புகளின்  செய்கைகளை  பார்த்துதான்  
அப்படி  உன்னை  செல்லமாய்  கூப்பிடுவேன் ..

குறும்பில்  மட்டும்தான்  குழந்தை  என்று  நினைத்தேன் !
குணத்திலும்  குழந்தையாகவே  மாறிவிட்டாய் ..

காதல்  என்பதை  கூட  
ஒரு  விளையாட்டாக  நினைத்துவிட்டாய் ..

என்னை  பொழுதுபோக்காய்  
உன்  நேரத்தை  பயன்படுத்திக்கொண்டாய்  ..
நமக்குள்  எதுவும்  நடக்காததாய் 
நடந்துக்'கொள்'கிறாய்..

இப்போது  உன்னால்  வெறுக்கப்பட்டவன்  என்றாலும் 
அப்போது  உன்  மனதில்  அன்பாய்  புதைக்கபட்டவன் 
என்பதை  மறந்து  விடாதே !!
நீயும்  நானும்  பிரிந்து  சில  வருடங்கள்  கடந்தாலும் 
ஏனோ  மனதின்  வலி  மரணத்தை  தொடுவதாய்  உணர்கிறேன் ..

உள்ளத்தில்  உள்ளதை  மட்டும்தான்  சொன்னேன் !
மற்றபடி  உன்னை  குறை  சொல்ல  சொல்லவில்லை  என்  பெண்ணே !

இப்பொழுதெல்லாம் 
என்  கண்ணீர்  என்  கன்னங்களை  தொடுவதே  இல்லை !
ஆம்  மெளனமாக  அழுவதை  கற்றுக்கொண்டேன் ..
வாய்வார்த்தைக்காக  சொல்லவில்லை !
வரிகளாலும் ,வார்த்தைகளாலும்    சொல்லமுடியாது ..
பக்கத்தில்  இருந்திருந்தாலும் 
முத்தமிட்டு  வெளிப்படுத்தி  இருப்பேன்  என்  அன்பை ..
உன்னை  எனக்கு  அவ்வளவு  பிடிக்கும் ..
என்  வீழ்ச்சிதான்  
உன்  மகிழ்ச்சி  என்றால் 
மீண்டும்  வா  பெண்ணே !
என்னை  ஏமாற்றி  எட்டி  உதைத்து'கொள்' 
எப்போதும்  நீ  என்  குழந்தைதான்   ..

Gopi kannan

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள