Monday, August 20, 2012

பாதை மாறி சென்றாலும் பத்திரமாய் செல் ..

என்னைத்தான்  மறந்தாய்  என்று  நினைத்தேன்
கடந்து -போன  என்  நினைவுகளையும்  மறந்தாய்  என்பதை
இப்போதுதான்  உணர்கிறேன் ..

உன்னை  தொடர்புக்கொள்ளும்-போதெல்லாம்
ஏனோ  தள்ளியே  நிற்கிறாய் !
தொலை-பேசியில்  உன்னை
தொடர்புக்கொள்ளும்போதெல்லாம்
ஏனோ  தொலைந்து  செல்கிறாய் !!

என்னுள்  பல  மாற்றங்கள் !!! 

இப்பொழுதெல்லாம்
எனக்கு  நானே  ஆறுதல்  சொல்லிக்கொள்கிறேன்

இருந்தும்  தனிமையில்  அழுகிறது  என்  மனம் !

நண்பர்களோடு  சிரித்து  மகிழ்ந்தாலும் 
பல  நேரங்களில்  உன்  நினைவுகள்  மின்னல்  போல
என்னுள்  சென்று  நிலைத்தடுமாறி
வெறுமையாய்  தனிமையில்  நிற்பதாய்  உணர்கிறேன் ..

இப்போது  சொல்கிறேன்  பெண்ணே
உன்னை  மற்றவருக்கு  விட்டு-கொடுக்க  மனம்  இல்லை
ஆனால்  உன்  மனம்  அதைதான்  தேடும்போது
நான்  என்ன  செய்ய  !?
தள்ளி  நின்று  வாழ்த்தி-விட்டுதான்  செல்ல  வேண்டும் ..

என்  உயிரே !
பாதை  மாறி  சென்றாலும்
பத்திரமாய்   செல் ..

நினைத்த  வாழ்க்கை  உனக்கு 
அமைய  அந்த  இறைவனை  வேண்டுகிறேன் .!

அன்பே  சிவம் 
 

6 comments:

  1. முடிவில் சொன்ன இரண்டு வரிகள் - அந்த மனம் இருந்தாலே போதும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் நண்பரே !!

      Delete
  2. Replies
    1. அன்புக்குரிய இக்பால் செல்வன் அவர்களே !
      மிக்க நன்றிகள் !!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள