தடையறத் தாக்க - படம் எப்படி இருக்கு !


 நண்பனின் கட்டாயத்தினால் 
இந்த படத்திற்கு சென்றேன் ..
அருண் விஜய் நல்ல நடிகர் என்றாலும் 
அவர் நடிப்பது ஏனோ ஓடுவதே இல்லை !
அவரிடம் எனக்கு பிடித்தது அவரின் விடா முயற்சி ..
படம் சரியாக ஓட வில்லை என சலித்துகொள்ளாமல்
தவறை திருத்திக்கொண்டு நடிப்பது !
சரி நான் இந்த தடையறத் தாக்க படத்திற்கு வருகிறேன் !
முதலில் அருண் விஜய் யை பாராட்டுகிறேன் ..
ஆம் அருமையாக நடித்திருக்கிறார் ..
சண்டை காட்சிகள் எதார்த்தமாய் அருமையாய் அமைந்துள்ளது .
படத்தில் நடித்தவர்களை ஒருவரை கூட குறை சொல்ல முடியாது 
அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் .
ஒரு மனிதனின் எதார்த்தமான கதை.
படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை 
சலிப்பின்றி அடுத்து என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ..
அளவுக்கு ஆவலாய் கதை நகர்கிறது.
உண்மையில் தடையறத் தாக்க படம் சூப்பர் .
எனக்கு படம் பிடித்திருக்கு !

இயக்குனர் : மகிழ்திருமேனி 
நடிகை :மம்தா மோகன் தாஸ்

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts