Tuesday, June 5, 2012

அந்த வலியை பற்றி எழுத்துகளால் வெளிபடுத்தும் போது கூட வலிக்கிறது ..




 இதுவரை  
நான்  கடந்து  வந்த  பாதையில்  
எத்தனை  சந்தோஷங்கள் 
எத்தனை  சோகங்கள் 
எவ்வளவு  சிரிப்பு.. 
எவ்வளவு  கண்ணீர்.. 

இப்படி  எல்லாவற்றையும்  கடந்து  வந்தாலும் 
காதலில்  ஏற்பட்ட  வலியின்  தாக்கம்  மட்டும்  இன்னும்  குறையவில்லை 
குறை  இல்லாமல்  வலியின்  நீளம்   நீண்டுக்கொண்டே  செல்கிறது !
பாரதியார்  சொன்ன  வரிகள்  மட்டும்  நினைவுக்கு  வருகிறது  
ஆம் , 
வார்த்தை  தவறி  விட்டாய்  கண்ணம்மா ....
மார்பு  துடிக்குதடி  ..!
பாவம்  அந்த  மனிதரும்  காதலித்திருப்பார்   போல !

முன்பை  விட  இப்போது  வலி  என்னவோ  குறைந்திருக்கிறது 
தூங்க  கூட  கஷ்ட  படுவேன் ..
இரவில்  உன்  நினைவால்  
எனக்குள்  ஏற்படும்  கேள்விகளுக்கு  விடை  தெரியாமல்  
"தனிமையில்  பித்து  பிடித்தவன்  போல  
ஒவ்வொரு நொடியும் செத்துக்கொண்டிருப்பேன்"
 
அந்த  நாட்களை  கூட  மறக்க  நினைக்கிறேன் !
அந்த  வலியை  பற்றி  எழுத்துகளால்  
வெளிபடுத்தும்  போது  கூட  வலிக்கிறது ..

தாகத்திற்கு  தண்ணீர்  கிடைக்காமல்  
தவிக்கும்  அநாதை உயிர்  போல 
சோகத்திற்கு  என்ன  செய்வது  என்று  தெரியாமல்  தவித்தேன் ... 
மன வலியால் துடித்தேன் !

அவ்வளவு  சோகத்திலும்  குடியை  தவித்தேன் 
உனக்கு  அது  பிடிக்காதே  என்று !

நாட்கள்  செல்ல  செல்ல  
என்னையே  உனக்கு  பிடிக்காமல்  போய்-விட்டதே  என  எண்ணி 
எனக்கு  ஆறுதலை  தேட  ஆரம்பித்தேன் !.

ஓயாமல்  உழைக்க  ஒரு  வேலையை  தேடினேன் 
இரவில்  உறங்க  குடியில்  மூழ்கினேன் .

நீ  சொன்ன  வார்த்தைகள்  அடிக்கடி  என்  காதில்  விழுந்துக்கொண்டே  இருக்கும் ..
புருஷா என்றும் ..
கண்ணன்  என்றும் ..
உலகத்தில்  நீ  எங்கு  இருந்தாலும்   உன்னை  தேடி  வருவேன் ..
என்றும் ..

இப்படி  பல  வார்த்தைகள்  பல  தருணங்களில்   கேட்டு  கொண்டே  இருக்கும் ..

அப்பொழுதெல்லாம்  கண்கலங்கியதுதான்  மிச்சம் ..



 சத்தமில்லா  உன்  முத்தம் 



சங்கீதமான  உன்  குரல் !


கொலுசின்  சத்தம்  போல  உன்  சிரிப்பு !

வெள்ளை  மான்  போல  உன்  அழகு ..!

கவிதை  பாடும்  உன்  கண்கள் !
புவி  ஈர்ப்பு  போல  உன்   பார்வை !

கருமேக  மயில்  இறகு  போல  உன்  கூந்தல் ! 

உன்  வெட்கத்தின்  தருணம்  

இப்படி  பல  அழிக்க  முடியாத  
உன்  நிஜத்தின்  அழகை  எப்படி  மறப்பேன்  என்று  தெரியவில்லை ..


மனதை  எப்படித்தான்  மாற்றினாலும் 
உன்னைதான்  தேடி  வருகிறது ..


இப்போது  ஒத்து   கொள்கிறேன் 
நான் உன்  அன்புக்கு  அடிமை  என்றும் 
காதலில்  நான்  ஒரு  பைத்தியக்காரன்   என்றும்  .........

மரணம் வரையிலும் உன் நினைவு என் மனதில் எப்போதும் இருக்கும் என்பதை மட்டும் மறந்தும் மறந்துவிடாதே  !!

அன்பே  சிவம் 
அன்புதான்  சிவம் 
 
 

1 comment:

  1. ungal kaadhali enge irunthalum intha kavithaiyai padithu kondu iruppal , ungaludaya ninavu kandipai avalukk irukkum :)

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள