Thursday, June 21, 2012

பெண்ணே "உன்னை கண்டதும் காதலிக்க வில்லை கண்மூடித்தனமாக காதலித்து விட்டேன் .


 சந்தோசமான  நேரங்களில் 
வருடத்திற்கு  ஒரு  முறை  அல்லது  ஆறு  மாதத்திற்கு  ஒரு-முறை 
என  குடித்த  நான் ..
மாதம்  வாரமாகி ..
வாரம்  இப்போது  நாட்களாக   செல்கிறது ..
குடும்ப   வேதனையும் 
காதலின்  நீண்ட  பிரிவும் ..
என்  குடிக்கு  காரணமாகி -விட்டது ..
இப்போது  வேதனையில்  மட்டுமே குடிக்கிறேன் ..
தினம்  தினம் ..

இப்படியே  நாட்கள்  தொடர்ந்தால் ..
நான்  செல்ல  வேண்டியதுதான்  கல்லறைக்கு .
"சாக  பிடிக்கவில்லை 
ஆனால்  வாழ  விருப்பம்  இல்லை" 
வேதனையில்  வலிக்கிறது  மனம் ..
அவள்  அன்புக்கு  அடிமையாகியதால் 
மறக்க , இரவில்  நிம்மதியாய்  உறங்க  குடித்தேன் ,
இப்போது  குடிக்கி  அடிமையாகினால் !?..
என்ன  செய்வேன் ..
புரியவில்லை !?
பிரிவின்  கடைசி  தருணத்தில்  
பல  வார்த்தைகள்  பேசிவிட்டால் .. என்னை  காதலித்தவள்.

அன்று  அவள்  என்  பாதங்களை  தொட்டால்  
அவள்  பிரிந்த  நாள்  என்று ..
பிரிவின்  கடைசி  தருணத்தில்  அவள்  பாதங்களை  நான்  தொட்டேன் 
நாம் பிரிவு  நாள்  என்று .
அன்றுதான் நான் என்னை மறந்து குடித்தேன் ..

அழுவது  எனக்கு  பிடிக்காத  ஒரு  காரியம் ..
அதுவும்  ஆண்கள்  அழுதால்  அவர்களை  எனக்கு  பிடிக்கவே  பிடிக்காது  ..
இன்று  எனக்கு  என்னை  பிடிக்கவில்லை ..
நானும்  தனிமையில்  அழுவதால் ....
பெண்ணே !
வெட்ட  வெட்ட  மீண்டும்  வளர்ந்துக்கொண்டே  இருக்கிறது  
என்னுள் உன் நினைவுகள் ..

சினிமா  கதையில்  வரும்  சோகமான  காதல்  காட்சிகள் ,
சோகமான  பாடல் ,இசை , 
இவைகளை  பார்த்தால், கேட்டால் ,
நானும்  சோகத்தோடு  முழ்கி-போகிறேன்..
அவள்  என்னிடம்  காதலை  சொல்லிக்கூட  எனக்கு  அவள்  மீது  காதல்  வரவில்லையே 
ஆவலுடன்  பழக  பழக 
பொய்மை  மாறி  அவளை  
உண்மையில்  காதலிக்க  ஆரம்பித்தேன் .
அப்போது  நினைத்தேன் , 
அவள்  இல்லாமல்    நான்  இருப்பேன் ,
நான்  இல்லாமல்  அவளால்  இருக்க  முடியாது  என்று .

எல்லாம்  தலைகீழாய்  மாறியது ..

யாருக்காகவும்  என்னை  விட்டு  தரமாட்டாய்  என  
எண்ணினேன் .
இப்போது  யார்யாருகாகவோ என்னை விட்டு சென்று விட்டாய் ..

இந்த  வரிகளை  எழுதும்  போது  ஏனோ  கண்  கலங்குகிறது ..
உன்னுடன்  சேர  ஆசை  இல்லை ,
வாழ  விருப்பம்  இல்லை ..

என்னை  புரிந்துக்கொள்ளாமல்    பிரிந்துவிட்டாய்  .
என்பதுதான்  என்  வருத்தம் .
என்னையும்  ஓர்  நாள்  புரிந்துகொள்வாய்  ..
அப்போது  உன்  கண்களில்  நான்  வருவேன் ..

பெண்ணே ! என்னை  எப்படி  மறந்தாய்  என்பதுதான் 
இன்னும்  என்னுள்  ஆச்சரியமாய்  உள்ளது ..


காதல்  என்றால்  என்ன  என்று ? என்னை  கேட்டால் 
"அழ  தெரியாதவனுக்கு ..
அழுகையை  வரவழித்து   விடும்"  இந்த  kadhal என்பேன் .
முன்பை  போல  இப்போது  அவ்வளவாக  சோகம்  இல்லை  , 
மனதின்  வலி  என்னவோ  குறைந்திருக்கிறது ..
பக்குவ  படுவதாய்  உணர்கிறேன் .

பெண்ணே  "உன்னை கண்டதும் காதலிக்கவில்லை 
கண்மூடித்தனமாக காதலித்து விட்டேன் .
அதான்  அளவில்லாமல்  உன்னை  நினைத்து  அழுதுவிட்டேன்  கண்ணீர்  வற்றும்  வரை "..

தொலைபேசியில்  உன்னை  தொடர்புக்கொண்டேன் . உன்  குரலையாவது    கேட்கலாம்  என்று . 
ஏனோ  உனக்கு  எடுக்க  மனம்  இல்லை .
"உனக்கு  திருமணம்  ஆகிவிட்டதா  என்பது  கூட  இன்னும்  எனக்கு  தெரியாது "
ஆனால்  ஒன்று  மட்டும்  உனக்கு  உறுதி -மொழி  அளிக்கிறேன் .
என்னால்  உனக்கு  என்ன  தொந்தரவும்  வராது.........
உன்னை  இவ்வளவு  ஆழமாய்  நேசித்தேன்  என்பதை 
இந்த  பிரிவின்  வலியில்தான் உணர்கிறேன் ..
எனக்கு   இல்லாவிட்டாலும் 
நீ  நலமோடு  வாழ  வேண்டும்  என்றுதான்  அந்த   இறைவனிடம்  வேண்டுவேன் .
அடக்கி  வைத்துள்ள  கண்ணீரைத்தான் 
இந்த  எழுத்துகள் மூலம்  வெளிப்படுத்தி  இருக்கிறேன் ..
முடிவு  இல்லாமல்    செல்லும்  இந்த  வலியின்  வரிகளுக்கு 
இப்போது  மட்டும்  முற்றுப்புள்ளி  வைக்கிறேன் .1 comment:

  1. உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


    Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை
    மேலும் விபரங்களுக்கு www.tamilpanel.com

    நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள