கமலஹாசனின் விஸ்வரூபம் ; ஹாலிவுட்டில் விஸ்வரூபம்




 சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா பெற்றது.
இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட்டு செய்துள்ள "விஸ்வரூபம்" படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது .
இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர்
பேரி ஆஸ்போன் கலந்துக்கொண்டார் .
கமல் கொடுத்த பேட்டி:

பேரி ஆஸ்போன் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் "மேட்ரிக்ஸ்" "லாட் ஆப் தி ரிங்ஸ்", 
"கிரேட் கேட்ஸ்பி" ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.
நானும், அவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகள் சொன்னேன் . நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது .

இது சர்வதேச தரத்திலான கதை என்றும், எனவே இந்த கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.

நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்தும் ஹாலிவுட் படத்தில், நானே கதாநாயகனாக நடித்த்ஹு டைரக்டும் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
முதலில்  இவ்வளவு பெரிய பொறுப்புகளை   நாம் எடுத்து கொள்ளமாலா! என்று தயங்கினேன் . அவர் கேட்டு கொண்டதன்பேரில் ஹாலிவுட் படத்தை நான் இயக்கி, நடிக்க சம்மதித்து இருக்கிறேன். என் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்சுடனும் இறைந்து படம் தயாரிக்க பேரி ஆஸ்போன் தயாராக இருக்கிறார். நான் ஹாலிவுட் க்கு வர வேண்டும் என்றும், தொடர்ந்து ஆங்கில படங்களை டைரக்ட்டு செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.


விஸ்வரூபம் படத்தின் "சவுண்ட் மிக்ஸிங்" வேலைகளை நான் சிங்கப்பூரில் செய்து கொண்டிருந்த போது பேரி ஆஸ்போன் என்னை சந்தித்தார் . என்ன படம் செய்கிறீர்கள் என்று என்ன கேட்டார்.

நான் "விஸ்வரூபம்" படத்தின் சில காட்சிகளை அவருக்கு காட்டினேன்.அதை பார்த்த அவர் என் மகளையும் அழைத்து வந்து இன்றொரு முறை பார்க்கலாமா!? என்று என்னிடம் கேட்டார்.
நான் சம்மதம் சொன்னதும் அவர் மகளுடன் வந்து 2 -வது முறையாக விஸ்வரூபம் படத்தை பார்த்தார்.

அவருடைய பங்குதாரை அழைத்து வந்து 3 -வது முறை அவர் முழுமையாக அந்த படத்தை பார்த்து ரசித்தார்.
சிங்கப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஸ்வரூபம் படத்தில் "டிரெய்லர் " வெளியிட்ட போது பேரி ஆஸ்போன் முன் கூட்டியே வந்து அரங்கில் அமர்ந்து கொண்டார் . ஹாலிவுட் படத்திற்காக கதையை நான் எழுத ஆரம்பித்துவிட்டேன் .மாதத்தில் 7 நாட்கள் பேரி ஆஸ்போன் எனக்காக ஒதுக்கி விட்டார்.

இந்த படம் தொடர்பான சில புத்தகங்களை படிக்க அவருக்கு நான் சிபாரிசு செய்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கும் ஹாலிவுட் படம் தேவர் மகன் , அபூர்வ சகோதரர்கள் பாணியில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும். உலக தரத்துடன் இந்த படம் உருவாகும். இதற்கான வேலைகள் தொடங்கி விட்டன.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.


 

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts