Tuesday, May 15, 2012

தேவதை என் வீட்டிற்கு வந்தால்


என்  வாழ்வில்  மறக்க  முடியாத  நாள் 
என்  தேவதை  என்  வீட்டிற்க்கு  வந்த  நாள் !


நட்பில்  தொடங்கி .. !
காதலில்  கடந்து ..
பிரிவில்  முடிந்த  (முறிந்த)
என்  காதல்  

"தேவதையை " பார்க்க  மாட்டோமா  என  ஏங்கினேன்   .
சில  நாட்கள் 
சில  மாதங்கள் 
ஒரு  வருடங்கள்  கடந்து  பார்த்தேன் ..
அதுவும்  என்  வீட்டின்  முன்பு ..

என்  கண்ணை  என்னால்  நம்ப  முடியவில்லை 
என்ற  பழமொழி   என்  நினைவுக்கு  வந்தது ..
அப்போது  என்  மனதில்  ஏற்பட்ட  மகிழ்ச்சிக்கு  அளவே  இல்லை ..
அது  ஒரு  இனம்புரியாத  சந்தோஷம் ..
என்  வீட்டிற்க்கு  வந்தவள்  என்  தாயின்  பாதங்களை  வணங்கி 
சற்று நேரம் கடந்து "என்னை  உற்று  பார்த்தால் ..
என்னால்  அவளை  பார்க்க  முடியவில்லை ..
ஆனால்  அவளை  மட்டும்  பார்க்க  வேண்டும்  என,  என்  மனம்  துடித்தது "
அன்று  பார்த்த  அதே  அன்போடு 
என்னிடம்  பேசினால் ....
பேசும்  தருணத்தில்  ஏனோ  என்  கண்கள்  கலங்கிக்கொண்டே  இருந்தது ..

அவள்  பார்வை 
அவள்  பேச்சி 
அவள்  சிரிப்பு 
அவள்  மனதின்  தவிப்பு  என  ஒவ்வொரு  சின்ன  சின்ன  
அசைவுகளையும்  பார்த்து  ரசித்தேன் .

"ஒருவரை  நீங்கள்  நேசிக்க  தொடங்கினால்  
அவர்கள்  செய்வது  எல்லாமே  அழகாகத்தான்  தெரியும் "
இதை  நீங்கள்  உணரும்  போது  புரியும் ..
அன்பின்  அர்த்தம்   தெரியும்  ..

பிறகு  வீட்டை  விட்டு  வெளியே  கிளம்பினோம் ..
அவளிடம்  கேட்டேன் 
AUTO வை  அழைத்து  வரவா?  அல்லது  என்  BIKE இல்  
போகலாமா  என்று !
BIKE இல்  அமர்ந்தால்  ..

சிறிது  தூரம்  சென்றுக்கொண்டிருக்கும் போது  
என்  தோள்மீது  கைவைத்து  எடுத்ததை  நான்  உணர்ந்தேன் ..
எதோ  ஒரு-வித  நடுக்கத்தில்  என்  தோல்  மீது  கை  வைத்து  எடுத்துவிட்டால் 
அப்போது  உணர்தேன்  அவள்  அன்பை ..
அப்போது  என்  மனம்  நினைத்தது ..

"இப்படியே  இருந்து  விடவேண்டும் 
அல்லது  
இப்படியே  இறந்து  விட  வேண்டும்  என்று "..

பிரிய-மனம்  இன்றி  "என்"அவளை  
வழியனுப்பினேன் ..

அவளும்  என்னை  பிரியா-விடையோடு  என்னை  விட்டு  பிரிந்தால் ............

அன்பே  சிவம் 


 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள