ஒரு கல் ஒரு கண்ணாடி - படம் எப்படி இருக்கு !

இன்று தான் படம் வெளியானது ..
முதல் ஷோ பார்க்க நண்பர்களோடு சென்றேன் !
ஒரு தியேட்டரில் மட்டும் படம் வெளியானதால் 
தியேட்டரில் அளவு கடந்த மக்கள் கூட்டம் !
உதயநிதி ஸ்டாலினைக்கு இதுதான் முதல் படம் இவருக்கா இவ்வளவு கூட்டம் என 
யோசித்தேன் !
அட படத்தில் நம் சந்தானம் இருப்பதால் மற்றும் sms , பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 
எடுத்த இயக்குனர்(Director )  ராஜேஷ் .
அட டா டா சொல்லவா வேண்டும் .
இதில் என்ன கொடுமை என்றால் எனக்கு முதல் ஷோ வுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை ..
விடாமுயற்சி விஷ்பருபா வெற்றி என்று மறு காட்சிக்கு டிக்கெட் வாங்க நினைத்தால் 
டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்கள் ....
மதிய காட்சி 2 :30 pm௦ காட்சிக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை ...
சில வேலைகளை முடித்து விட்டு , மாலை காட்சிக்கு அடித்து புடித்து நண்பன் டிக்கெட் 
வாங்கினான் ..... 
ஒரு கல் ஒரு கண்ணாடி தொகுப்பு :
Opening ல ஹீரோ வுக்கு வராத சவுண்ட் 
நம்ம சந்தானம் குரலுக்கு வந்தது ...
அவ்வளவு ரசிகர்கள் சந்தானத்துக்கு ..
கதை ஏதும் பெரிதாக இல்லை !
ஆனால் காமெடி க்கு அளவே இல்லை !
சந்தானத்தின் Body Language , மேமிகிரி, Face Expressions ,
போன்றவை அருமை !
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு 
பாடல் அருமை !
இரண்டாவது பகுதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் 
அதிலும் காமெடி க்கு பஞ்சம் இல்லை, 
மொத்தத்தில் ..
படத்திற்கு செல்வதே ஒரு Entertainment காகத்தான் ..
எனக்கு படம் ஓகே ...
சந்தானம் காமெடி காகவே படத்தை பார்க்கலாம் 
படம் நல்ல இருக்கு !!

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா, சரண்யா  மற்றும் பலர் 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

எழுத்து - இயக்கம்: ராஜேஷ் M

தயாரிப்பு
 - ரெட் ஜெயன்ட்

படத்தில் ட்ரைலர் :




1 Comments

Post a Comment
Previous Post Next Post

Popular Posts