Sunday, March 25, 2012

என் வரிகள்(வலிகள்) உனக்கு கூடவா புரியவில்லை ?



உனக்கு  வந்தது  காதலா !?
பெண்ணே  உனக்கு  வந்தது  காதலா ..
5 வருடங்கள்  பழகிய  என்னையே 
நீ  ஒரு  நொடியில்
தூக்கி  எரிந்து  விட்டாய்
திருமணம்  என்ற  பெயரில்
உனக்கு  நடக்கும்  மறுமணத்திற்கு
பிறகு ..
அவனையும்  சில  மாதங்களில்

தூக்கி  எரிந்து  விடுவாயோ !?
..
காதல்  எல்லாம்  பொழுது  போக்காக  மாறிவிட்டதா    என்ன !..
உன்  பொழுதுபோக்குக்கு
நான்தான்   உனக்கு  கிடைத்தேனா !?
சிரித்தாய்
அழுதாய்
நெருங்கினாய்
உருகினாய்
அணைத்தாய்
அன்பு  காட்டினாய்


எல்லாம்  உன்  பொழுது  போக்கா !?
என்  காதலில்  ஏற்பட்ட  வெறுப்பால்
உண்மை  காதலாக  இருந்தாலும்
காதலர்களாக  இருந்தாலும்
ஏனோ  வெறுப்புதான்  வருகிறது ..
சில  சமயம்  சிரிப்பும்  வருகிறது ..
பெண்ணே !
இப்போது  என்னை  கவிதை  எழுத  வைத்துவிட்டாயே !!
மற்றவர்களை  விட்டு  விடு !
என்   வரிகள்(வலிகள்)  உனக்கு  கூடவா  புரியவில்லை ?

இது  கவிதை  வரிகள
அல்லது
என்  வலியின்  வரிகளா !!?
இப்போதும்  உன்னை  நேசிக்கிறேன்
என்னோடு  வாழ   விட்டாலும்  பரவாயில்லை
நலமோடு  வாழு !
பாதைமாறி  சென்று  விடாதே !
காதலால்  உன்னால்  கை-விட
கழட்டி-விட  பட்டவன்
முதலும்  முடிவும்  நானாக  இருக்கட்டும் ..
நலமோடு  வாழ்வாயாக !
அன்பே  சிவம் !!!!!!!!!!!!
                                         -Gopi kannan

2 comments:

  1. வலிகளே வார்த்தைகளாய்... உருவான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வலிகளை புரிந்து கொண்ட என் நண்பருக்கு
      முழுமையான எனது மூன்று எழுத்து
      " நன்றி "

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள