Thursday, February 9, 2012

உனக்கு வலிக்குமே என்று!!

நிஜத்தை  விட்டு
நிழலை  தேடி  ஓடிய  என்  உயிர்  காதலியே !
என்  கண்கள்  கலங்கினாலும் 
உன்  உதடுகளில்  சிரிப்பைதான் 
எதிர்  பார்த்தேன் ,
என்னை  விட்டா  பிரிந்தாய் ?

எனக்கு  அடிபட்டாலும்  உன்னிடம் 
சொல்லமாட்டேன் 
உனக்கு  வலிக்குமே  என்று !
என்னை  விட்டா  பிரிந்தாய் !?

வஞ்சனை  இல்லாமல்   

நகைசுவையாய் பேசி  உன்னை  சிரிக்கவைத்தேன்
என்னை  விட்டா  பிரிந்தாய் !?

என்  வேலையை  கூட  விட்டு  விட்டு 
மணிகணக்கில்  காத்து  கொண்டிருந்தேன் 
உனக்காக  !
என்னை  விட்டா  பிரிந்தாய் !?

உன்னை  தூரத்தில்  பார்க்கும்  சில  நொடிக்காக ,
உன்  விட்டருகே  யாரோ  ஒருவனைப்போல்   காத்துக்கொண்டிருந்தேன்
என்னை  விட்டா  பிரிந்தாய் !?

ஆம் ,
பிரிந்துதான்  விட்டாய்  என்னை  புரிந்துகொள்ளாமல் !!
நான்  செய்த  ஒரே  தவறு 
உன்னை  உண்மையாக  காதலித்தது ...........

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள