Tuesday, January 24, 2012

மறந்தும் மறந்து விடாதே .....!!




எத்தனை முறைதான்
என் நினைவில்
உன்னை தேடிக்கொண்டிருப்பது ..

ஒரு முறை , ஒரே ஒரு முறை உன்னை
பார்க்க முடியாதா !?

நீயும் நானும் பிரிந்திருக்கிறோம்
நிஜம்தான் ...!
நிரந்தர பிரிவு என்பதும் நிஜம்தான் ...
ஆனால் ! ஆயிரம் இருந்தாலும்
நீ என் காதலியல்லவா !



நாம் கடந்து வந்த நாட்களை
நினைத்தால் , சில நேரங்களில் சிரிப்பும்


பல நேரங்களில் அழுகையும் வந்து விடுகிறது ..

எங்கோ நீ இருக்கிறாய் ..
என்னை கண்டிப்பாக நினைத்து பார்ப்பாய்
என்று நம்புகிறேன் ..

பிரிவுக்கு மருந்து காலம்தான் ..
ஆம் ,
மனதின் வலி குறைந்திருகிறது ..
என் கையில் பச்சை குத்திய
உன் பெயரை போலவே !..
என் மனதிலும்,
உன் நினைவுகள் அப்படியே பதிந்து விட்டன ...

என்னமோ தெரியவில்லை
இப்பொழுதெல்லாம் உன்னை காண வேண்டும் ..
உன்னிடம் சில வார்த்தைகளையாவது
பேச வேண்டும் என்று
என் மனம் விரும்புகிறது ..

முன்பை போல , இப்போதுதெல்லாம்
அழுவதில்லை ..
என் மனதுக்கு ஆறுதல் சொல்ல
கற்று கொண்டேன் ..
ஆனால் , அதையும் மீறி
சில நாட்களில் , தனிமையில்
கண்ணீர் வந்துவிடுகிறது ..

அன்பே ,
உணர்ந்து சொல்கிறேன் !
உனக்கு எப்படியோ !?  தெரியவில்லை !!
நீ இல்லாத வாழ்க்கை
நரகமாகத்தான் செல்கிறது ..
சந்தோசமாக இருப்பதாக
நானே நடித்துகொள்கிறேன்
ஆனால் உண்மையில் !?

என்னை கட்டுபடுத்த தெரிந்த
எனக்கு ,
என் உணர்வுகளை கட்டுப்படுத்த
தெரியவில்லை..
அவை, இன்னும் உன்னைத்தான் ,
உன் அன்பைத்தான் எதிர்ப்பார்கின்றது ...

நீ எவ்வளவு
தொலைவில் இருந்தாலும்
என் நினைவுகள் உன்னை மட்டுமே
தேடி கொண்டிருக்கும் என்பதை
மறந்தும்
மறந்து விடாதே ......!!
                               அன்புடன்
                                      கண்ணன் *2012

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள